About Me

Wednesday, October 5, 2011

அப்பாடா... 32 ஆண்டுகளுக்குப் பின் புதிய பாடத் திட்டம்

மேல்நிலைப் பள்ளிகளில், தொழிற்கல்வி பிரிவின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு, 32 ஆண்டுகளுக்குப் பின், நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இருந்த, 60 பாடப் பிரிவுகளில், போணியாகாத, 54 பாடப் பிரிவுகளை நீக்கிவிட்டு, புதிய பாடப் பிரிவுகளுடன், 12 பாடத் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. புதிய பாடத் திட்டப்படி, வரும் மார்ச்சில் பொதுத்தேர்வு நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலத்தில் உள்ள, 2,400 மேல்நிலைப் பள்ளிகளில், 1,605 பள்ளிகளில், தொழிற்கல்வி பாடப் பிரிவுகள் இயங்கி வருகின்றன. இதில், ஒன்றரை லட்சம் மாணவர்கள் படித்து வருகின்றனர்.32 ஆண்டுகளாக மாற்றமே இல்லைகடந்த, 1978ல் மேல்நிலைக்கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, தொழிற்கல்விப் பிரிவும் அறிமுகப்படுத்தப் பட்டது. அதன்பின், கலை, அறிவியல் பிரிவு பாடத் திட்டங்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு வந்த நிலையிலும், தொழிற்கல்வி பிரிவுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்காமல் ஒதுக்கி வைக்கப்பட்டன.இதன் காரணமாக, 32 ஆண்டுகளாக, காலத்திற்கு ஏற்ப புதிய பாடத்திட்டம் உருவாக்கப்படாமல் இருந்தது.தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக நிர்வாகிகள், தற்போது வேலை வாய்ப்பு அதிகம் உள்ள துறைகளை கண்டறிந்து, அதற்கேற்ப புதிய பாடத்திட்டம் எழுத வேண்டும் என்று, தமிழக அரசை தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதன் காரணமாக, புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டது.கடந்த கல்வியாண்டில், பிளஸ் 1 வகுப்பிற்கு புதிய பாடத்திட்டம் அமலுக்கு வந்த நிலையில், நடப்பு கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.
9 புதிய பாடப் பிரிவுகள்
1. பொது இயந்திரவியல்2. மின் இயந்திரங்களும், சாதனங்களும்3. மின்னணு சாதனங்கள்4. துணிகளும், ஆடை வடிவமைத்தலும்5. வேளாண் செயல்முறைகள்6. உணவு மேலாண்மையும், குழந்தை நலனும்7. செவிலியத் துறை8. கட்டட பட வரைவாளர்9. அலுவலக மேலாண்மை
3 பழைய பாடப் பிரிவுகள்10. கணக்குப்பதிவியலும், தணிக்கையியலும்11. ஆட்டோ மெக்கானிக்12. டெக்ஸ்டைல்ஸ் டெக்னாலஜி- ஏ.சங்கரன் -

Dinamalar - No 1 Tamil News Paper

No comments: