About Me

Wednesday, October 5, 2011

வெளியே போங்கடா : ஆசிரியர்களை துரத்திய அதிகாரிகள்

திருவண்ணாமலை ஒன்றியத்தில் 700க்கும் அதிகமான தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். அவர்களில் 200க்கும் அதிகமானோர் கடந்த ஆட்சியில் புதியதாக நியமிக்கப்பட்டவர்கள்.

இந்த 700க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு மாத முடிவில் 31 ந்தேதி அல்லது 1ந்தேதி மாதச்சம்பளம் வழங்குவார்கள். ஆனால் கடந்த 6 மாதமாக 10ந்தேதிக்கு மேல் சம்பவளம் வழங்கி வந்துள்ளது திருவண்ணாமலையில் உள்ள ஒன்றிய தொடக்ககல்வி அலுவலகம்.  


இதுப்பற்றி ஆசிரியர்கள் கேட்டபோது, ஆள் பற்றாக்குறை என்று கூறியுள்ளார்கள். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாத சம்பளம் அந்த மாத இறுதியில் வழங்கியிருக்க வேண்டும்.  ஆனால்,  வழங்கவில்லை.

அதற்கடுத்தார் போல் செப்டம்பர் மாத சம்பளம் அந்த மாத இறுதியில் வழங்கியிருக்க வேண்டும். அதுவும் வழங்கப்படவில்லை.

அக்டோபர் 4ந்தேதி வந்தும் சம்பளம் வழங்காததால் சில ஆசிரியர்கள் திருவண்ணாமலை ஒன்றிய தொடக்கப்பள்ளி அலுவலகத்தில் போய் கேட்டுள்ளனர்.



அதற்க்கு அங்குள்ள அங்குள்ள ஊழியர்கள், எங்களாள போட முடியாது உங்களால் என்ன பண்ண முடியுமோ பண்ணுங்கடா போங்கடா வெளியில என துரத்தியுள்ளார்கள். பட்டதாரிகளான அந்த ஆசிரியர்களால் இந்த வார்த்தைகளை கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இதனால் உடனடியாக தங்களது சங்க செயற்குழுவை இன்று மதியம் கூட்டி ஒன்றிய தொடக்ககல்வி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துவது என முடிவு செய்து, அதன்படி 200 போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன  


நக்கீரன் செய்தி

No comments: