About Me

Monday, October 10, 2011

சேலம் ;அரசு பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

வாழப்பாடி -உளுந்தூர் பேட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். இன்று காலை இந்த பள்ளி மாணவர்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் செய்யும் பணியாளர் மோகனின் செல்நம்பரில் மர்ம நபர் ஒருவர் தொடர்பு கொண்டார்.


அவர் மோகனிடம் இந்த பள்ளியின் வளாகத்தில் வெடிகுண்டு வைத்து இருப்பதாகவும், அது விரைவில் வெடித்துவிடும் என்றும் கூறிவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன் வெடிகுண்டு மிரட்டல் பற்றி தலைமை ஆசிரியர் செல்வ ராஜுக்கு தகவல் கொடுத்தார்.

அவர் உடனடியாக பள்ளி மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியேறும்படி உத்தரவிட்டார். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டதோடு வெடிகுண்டு செய்தியை கேட்டு ஆசிரியர்களும், மாணவர்களும் அலறி அடித்துக் கொண்டு வகுப்பறையை விட்டு வெளியேறினர். அவர்கள் அனைவரும் பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் உட்கார வைக்கப்பட்டனர்.

வெடிகுண்டு மிரட்டல் குறித்து தலைமை ஆசிரியர் செல்வராஜ் வாழப்பாடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். இதனையடுத்து போலீசார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து பள்ளியில் சோதனை நடத்தினர்.

சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம ஆசாமி யார்? என்று தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

No comments: