இந்த ஆண்டுக்கான தொலைத் தொடர்பு துறையின் வரைவுக் கொள்கையை வெளியிட்டு பேசிய அவர், நாடு முழுவதும் ஒரே தொலைப்பேசி சேவை கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார். மாநில அளவில் மேற்கொள்ளப்படும் செல்போன் சேவை மாற்றங்களை, இனி தேசிய அளவிலும் செய்து கொள்ளலாம் என்றும் கபில் சிபல் தெரிவித்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு உள்ளிட்ட ஸ்பெக்ட்ரம் தொடர்புடைய அனைத்து சேவைகளுக்கும் தனி சட்டம் கொண்டுவரப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். தொலைபேசி வைத்திருப்பதும், இனி பான்கார்ட் போன்று அடையாளமாக சேர்க்கப்படும் என்றும் கபில்சிபல் குறிப்பிட்டுள்ளார். கிராமப்புறங்களுக்கு ஆப்டிக்கல் ஃபைபர் கேபிள் மூலம் இன்டெர்நெட் இணைப்பு வழங்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் தொலைத் தொடர்பு துறைக்கு சாதகமான இந்த அறிவிப்புகளால், இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டன.
thanks
No comments:
Post a Comment