About Me

Tuesday, October 11, 2011

கம்ப்யூட்டர் துறையில் மாணவர்களுக்கு எதிர்காலம் உள்ளது

ஓசூர்: ""கம்ப்யூட்டர் துறையில் மாணவர்களுக்கு சிறந்த எதிர்காலம் உள்ளது, '' என பாரதிதாசன் பல்லைக்கழக பேராசிரியர் தெரிவித்தார்.ஓசூர் எம்.ஜி.ஆர்., கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய கம்ப்யூட்டர் அறிவியல் கருத்தரங்கம் நடந்தது. கல்லூரி முதல்வர் முத்துமணி தலைமை வகித்தார். அதியமான் இன்ஜினிரிங் கல்லூரி முதல்வர் ரங்கநாத் முன்னிலை
வகித்தார்.கம்ப்யூட்டர் துறை பேராசிரியர் சாந்திஜெஸ்லெட் வரவேற்றார். பாரதிதாசன் பல்கலைக்கழக பேராசிரியர் ஜார்ஜ் தர்ம பிரகாஷ்ராஜ் கருத்தரங்கை துவக்கி வைத்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:இன்றைய மாணவர்களுக்கு மன வலிமை மிக முக்கியமாக தேவைப்படுகிறது. கல்வியோடு தங்களுடைய மன வலிமையை மாணவர்கள் வளர்த்து கொள்ள வேண்டும். அனைத்து துறைகளிலும் தற்போது தினசரி புதிய தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. அதற்கு தகுந்தார் போல், மாணவர்கள் தங்கள் அறிவையும், மனவலிமையும் வளர்த்து கொள்ள வேண்டும்.குறிப்பாக கம்ப்யூட்டர் துறையில் மனித உடலின் செயல்பாட்டை ஒத்த பல்வேறு புதிய தொழில்நுட்பங்கள் வந்துள்ளன. இதே நிலை நீடித்தால் கம்ப்யூட்டர் துறையில் வருங்காலத்தில் மிகபெரிய புரட்சி ஏற்பட வாய்ப்பிருக்கிறது.கம்ப்யூட்டர் துறையில் மாணவர்களுக்கு மிக சிறந்த எதிர்காலம் உள்ளது. அதனால், மாணவர்கள் கம்ப்யூட்டர் துறையில் ஆர்வமாக ஈடுபட வேண்டும். புதியவற்றை கற்று தெரிந்து கொண்டு பயிற்சி எடுத்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இரு நாள் நடந்த இந்த கருத்தரங்கில் இந்தியா முழுவம் இருந்து பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு தங்களுடைய ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர்.சிறந்து கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. கருத்தரங்க ஏற்பாடுகளை எம்.ஜி.ஆர்., கல்லூரி கம்ப்யூட்டர் துறை போராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.

No comments: