தற்போது கடலூர் மாவட்டத்தில் உள்ள குறுந்தகவல் சேவையின் (எஸ்எம்எஸ்) மூலம் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்யும் திட்டம் விரைவில் மாநிலம் முழுவதும் அமல் செய்யப்பட உள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
மாவட்ட கலெக்டர்கள், காவல்துறை உயர்அதிகாரிகள் பங்கேற்கும் 2 நாள் மாநாடு சென்னையில் நடைபெற்று வருகிறது. அதில் பேசிய ஜெயலலிதா கூறியதாவது, எஸ்எம்எஸ் வருகை பதிவு திட்டம் மாநிலம் முழுவதும் அமலாவதன் மூலம், அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்களின் வருகை உறுதி செய்யப்படும் என்றும், இதன்மூலம், மாணவர்களின் கல்வித்தரம் உயரும் என்று அவர் கூறினார்.
32 மாவட்டங்கள் தொடர்பான 43 வளர்ச்சித் திட்டங்கள் குறித்த அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இதில், தூத்துக்குடியில் புதிய மேம்பாலம், லாரி முனையம் உள்ளிட்ட 5 திட்டங்களும், ராமேஸ்வரம் மீனவர்களுக்கு மீன்பிடிக்க 1 நாள் அனுமதிக்குப் பதிலாக பலநாள் அனுமதி உள்ளிட்ட திட்டங்களையும் அவர் அறிவித்தார்.
அனைத்து வி.ஏ.ஓக்களுக்கும் பிரிண்டர் வசதியுடன் கூடிய லேப்டாப் வழங்கப்படும் என்றும். மாவட்ட கலெக்டர்களுக்கு சட்டம் தொடர்பான பிரச்னைகளுக்கு உதவ தனி உதவியாளர்கள் நியமிக்கப்பட உள்ளதாக ஜெயலலிதா மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment