About Me

Sunday, November 27, 2011

பின்தங்கிய பள்ளிகளை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.


பின்தங்கிய பள்ளிகளை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும் என்று அனைத்து தொடக்க கல்வி அலுவலர்களுக்கும் உத்தரவிடப்பட்டு உள்ளது.சமச்சீர் கல்வி அமல்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக,
அரசுப்பள்ளிகளில் தேர்வுக்குரிய பாடப்பகுதிகளை முழுமையாக முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் காலாண்டு தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 40 சதவீதமாக குறைந்தது. பாடங்கள் நடத்தப்படாததால் மாணவர்களின் கற்றல் அடைவுகளை இதுவரை உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் கள்(ஏ.இ.ஓ.,) ஆய்வு செய்யவில்லை. இந்நிலையில், தமிழக தொடக்கக் கல்வி இயக்ககம், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்கள்(டிஇஇஓ), உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் பள்ளி ஆய்வு செய்தலை கட்டாயமாக்கி உள்ளது.அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:?டி.இ.இ.ஓ., ஒரு மாதத்தில் குறைந்தது 20 பள்ளிகளையும், ஏஇஓக்கள் 30 பள்ளிகளையும் பார்வையிட வேண்டும். டி.இ.இ.ஓ., மற்றும் ஏ.இ.ஓ.,க்கள் அந்தந்த மாவட்ட மற்றும் வட்டாரங்களின் பின்தங்கிய, ரிமோட் ஏரியாவில் உள்ள 5 பள்ளிகளை தத்தெடுத்து அதன் வளர்ச்சிக்கு பாடுபட வேண்டும்.?மாணவர்களின் கற்றல் அடைவுகள் குறித்து ஆய்வு செய்து பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும்.?எஸ்எஸ்ஏ திட்டத்தின் மூலம் வழங்கப்பட்ட சி.டி.,க்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பதையும், அரசு வழங்கிய இலவச லேப்டாப் கம்ப்யூட்டர் பயன்பாட்டில் உள்ளதா? என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். பள்ளிகளில் குடிநீர், கழிப்பறை, சுற்றுச்சுவர், கட்டிட வசதிகள் தேவையிருப்பின், சார்ந்த அலுவலருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். டிச.31ம் தேதி வரை ஓய்வு பெற உள்ள ஆசிரியர்கள், அலுவலர்களின் பணிப்பதிவேட்டை பார்வையிட அனுமதிக்க வேண்டும்.?ஏ.இ.ஓ.,க்கள், ஒன்றியத்தில் நடைபெறும் எதிர்பாராத சம்பவங்களை உடனுக்குடன் அலுவலரின் கவனத்துக்கு கொண்டு வர வேண்டும். அதேபோல் பத்திரிகைகளில் தங்கள் ஒன்றியத்தை சார்ந்து வெளியிடப்படும் நிகழ்வுகளை உடனடியாக அலுவலரின் கவனத்துக்கு கொண்டு வருதல் வேண்டும்.

No comments: