கல்வியாளர்கள் குழு தயாரித்த பாடப்புத்தகங்களில் உள்ள கருத்துக்களை மட்டுமே கற்று வந்த அரசுப்பள்ளி ஆசிரியர்கள்,
பாடத்திட்டம் தொடர்புடைய, புத்தக த்துக்கு வெளியே உள்ள தகவல்களை தெரிந்து கொள்ளும் வகையில், அவர்களை கல்விப்பயணம் அழைத்துச் செல்ல அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம் முடிவு செய் துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு மாவட்டத்தில் இருந்தும் தலா 500 ஆசிரியர்கள் வீதம் மாநிலம் முழுவதும் 16 ஆயிரம் ஆசிரியர்கள் கல்விப்பயணம் அழைத் துச் செல்லப்பட உள்ளனர்.
9, 10ம் வகுப்பு பாடம் கற்பிக்கும் பட்ட தாரி ஆசிரியர்கள் அழைத்துச் செல்லப்ப டுகின்றனர். தமிழக சுற்றுலாத்துறை, ரயில்வே துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்ப டுத்தப்பட உள்ளது. இதற்காக ரூ.8 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இக்கல்வி பயணம், வட இந்திய சுற்றுப் பயணம், தென்னிந்திய சுற்றுப் பயணம், தமிழக சுற்றுப் ப யணம், மாவட்ட சுற்றுப் பயணம் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு உள்ளது. மாவட்டத்திற்கு 10 ஆசிரியர்கள் கடல் கடந்தும் கல்விப்பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
குடவரை ஓவி யங்கள், சித்தன்னவாசல், மாமல்லபுரம் சிற்பங்கள், கனகர தொழிற் சாலை களின் செயல்பாடுகள், தாதுப்பொருட்களின் மூலமும் பொருட்கள் தயாரிப்பும் என புத்த கத்தில் மட்டுமே எழுத்து க்களாக படித்து வந்த ஆசிரியர்களுக்கு இந்த சுற் றுலா மூலம் விசாலமான பார்வை கிடைக்கும்.
இதுகுறித்து அனை வருக்கும் இடைநிலைக் கல்வித்திட்ட அலுவலர் கள் கூறுகையில், ‘‘கல்வி பயணத்துக்கான பயணச் செலவு, உணவு மற்றும் தங்குமிட செலவுகளை இடைநிலைக் கல்வித் திட் டமே ஏற்றுக் கொள்கிறது.
மாதிரிப்பள்ளி மற்றும் புதிதாக தரம் உயர்த்தப் பட்ட பள்ளி ஆசிரியர்க ளுக்கு இக்கல்வி பயணத் தில் முன்னுரிமை வழங்கப் படும். பயண நாட்கள், பணி நாட்களாக கருதப் படும். விரைவில் கல்விப் பயணம் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்,’’ என்றனர்
No comments:
Post a Comment