About Me

Friday, December 30, 2011

பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த தடை

சென்னை:"தானே' புயல் காரணமாக, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்த, தமிழக அரசு தடை விதித்துள்ளது.பள்ளிக் கல்வித் துறை செயலர் ஸ்ரீதர்,
நேற்றிரவு வெளியிட்ட உத்தரவு:மாநிலத்தில் உள்ள அனைத்து வகைப் பள்ளிகளிலும் அரையாண்டுத் தேர்வுகள் முடிந்து, விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில், மாணவர்களுக்கு, குறிப்பாக பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாதென ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது."தானே' புயல் காரணமாக, சூறாவளி காற்றுடன் நாளை (இன்று) பலத்த மழை பெய்யும், என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் உள்ள அனைத்து வகை பள்ளிகளும், எக்காரணத்தைக் கொண்டும் மாணவ, மாணவியருக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் இதர நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. இதை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.


No comments: