சேலம்: சேலம் மாவட்டத்தில், சிறப்பு ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள், முதன்மை கல்வி அலுவலகத்தில் விநியோகிக்கப்பட்டு வருகின்றன.
கலெக்டர் மகரபூஷணம் வெளியிட்டுள்ள அறிக்கை:தமிழக அரசு, மாணவ மாணவியருக்கு தரமான கல்வியை வழங்கும் பொருட்டு, கூடுதல் கட்டிடங்கள், அறிவியல் ஆய்வகங்கள் அமைத்து தர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மாணவர்கள், சிறந்த உடல் தகுதி பெற்று விளங்கவும், ஓவியம், தையல் போன்ற கலைகளில் சிறந்து விளங்கவும், அக்கலைப்பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றுள்ள ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.சேலம் மாவட்டத்தில், நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் அனைவருக்கும் கட்டாய கல்வித் திட்டத்தின் கீழ், 6,7 மற்றும், 8ம் வகுப்புகளுக்கு, 220 பகுதி நேர கலை ஆசிரியர்களையும், 209 பகுதி நேர உடற்கல்வி ஆசிரியர்களையும், 336 பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களையும் நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் பணியிடங்களுக்கு தேவையான கல்வித்தகுதியை பெற்றவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் வழங்கப்படும், விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து வரும், 15ம் தேதி மாலை, ஐந்து மணிக்குள், முதன்மை கல்வி அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியர் பணியிடங்களுக்கு, முழு தகுதியுடையோர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளலாம்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment