நாமக்கல்: "தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு ஆசிரியர் நிர்வாக மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு நாளை (டிச., 21) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது' என,
மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அருள்மொழிதேவி தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: நாமக்கல் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வித் திட்டத்தின் கீழ், 2011-12ம் கல்வி ஆண்டில் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு, ஆசிரியர்களுக்கான நிர்வாக மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு, நாமக்கல் எஸ்.பி.எம்., உயர்நிலைப்பள்ளியில், நாளை (டிச., 21) துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது. நாளை (டிச., 21) காலை 10 மணிக்கு நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டதால், பணியிடம் இல்லாத நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான பணியிடம் வழங்குதல், உயர் நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப்பள்ளிகளில், 6வது, 7வது, 8ம் வகுப்புகளில் பணிபுரிந்து உயர்நிலைபள்ளிக்கு ஈர்த்துக் கொள்ளப்படாத பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்கப்படுகிறது. பகல் 2 மணிக்கு, நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு, பட்டதாரி, தமிழாசிரியர் பதவி உயர்வு நடக்கிறது.டிசம்பர் 22ம் தேதி காலை 10 மணிக்கு, தரம் உயர்த்தப்பட்ட நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றி வரும் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு நிர்வாக மாறுதல் வழங்கப்படுகிறது. பகல் 2 மணிக்கு, தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment