இந்தியாவில் அனைவருக்கும் கல்வி சட்டத்தின் கீழ் தரமான கல்வியை வழங்கும் வகையில் மத்திய அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான சிடிஇடி தகுதித்தேர்வை சிபிஎஸ்இ நடத்தி வருகிறது.
இந்த ஆண்டு இத்தேர்வு ஜனவரி மாதம் 29ம் தேதியில் நடைப்பெற்றது. இத்தேர்வு சென்னையில் மட்டும் சுமார் 5,760 ஆசிரியர்கள் தேர்வு எழுதினர். மத்திய அரசால் நடத்தப்பட்டு வரும் பள்ளிகளில் பணியாற்றும் பல ஆசிரியர்களும் இத்தேர்வில் கலந்து கொண்டனர்.
2010க்கு பிறகு மத்திய அரசு பள்ளிகளில் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள், சிடிஇடி தேர்வு 5 ஆண்டுக்குள் எழுதி தேர்ச்சி பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment