About Me

Saturday, April 28, 2012

ஜூலை 7-ல் குரூப்- 4 தேர்வுகள்- ஆன்லைனில் மட்டும்தான் விண்ணப்பிக்க முடியும் என அறிவிப்பு...

சென்னை: தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த இளநிலை உதவியாளர் போன்ற குரூப் 4- பணியிடங்களுக்கான தேர்வுகள் ஜூலை 7-ந் தேதி நடைபெற உள்ளது.


தமிழ்நாட்டில் 100க்கும் மேற்பட்ட அரசு துறைகளில் 30 ஆண்டுகாலமாக இளநிலை உதவியாளர்கள் போன்ற பணியிடங்கள் ஆயிரக்கணக்கில் நிரப்பப்படாமல் உள்ளன. மொத்தம் 10,793 பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணியிடங்களுக்கு 18 வயது நிரம்பியவர்கள் அனைவரும் விண்ணப்பிக்கலாம். இதற்கான தேர்வு ஜூலை 7-ந் தேதி நடைபெற உள்ளது. 10ம் வகுப்புத் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கான தேர்வை எழுதலாம்.

விண்ணப்பங்கள் முன்னர் போல் அச்சடித்து விநியோகிக்கப்படவில்லை. அரசுப் பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலேயே இருக்கும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்தாலே போதும். அச்சடிக்கப்பட்ட விண்ணப்பங்களை ஏற்கப்போவதில்லை என்றும் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.net) முதலில் பதிவு செய்து கொண்டு யூஸர் நேம் மற்றும் பாஸ்வேர்டுகளைப் பெற்றுக் கொள்ள வெண்டும்.

பின்னர்தான் இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்ய வேண்டும். இத்தேர்வுக்கான கட்டணத்தை அஞ்சலகங்கள் மூலமாகவோ அல்லது டெபிட் கார்டு மூலமோ இணையதளத்திலேயே கட்டலாம்.

இம்முறை குரூப் 4 தேர்வை பல லட்சம் பேர் எழுத உள்ளனர். ஒவ்வொரு தாலுகாவிலும் தேர்வு மையமும் அமைக்கப்பட உள்ளது. தேர்வுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதால் கணிணிகளுடன் கூடிய 500-க்கும் மேற்பட்ட மையங்கள் அஞ்சலகங்கள் உள்ளிட்ட முக்கிய இடங்களில் ஏற்படுத்தப்படவும் உள்ளன.

No comments: