நண்பனுக்கு வாழ்த்துக்கள்
http://nilanilal.blogspot.com/
ஆத்தா நான் பாஸாயிட்டேன் - ஆனந்தவிகடனில் எனது வலைப்பூ
நெஞ்சம் நெகிழ்கிறது , ஆனந்தத்தில் கண்கள் பனிக்கிறது ,எனது வலையுலக சொந்தங்களே உங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகளற்று தவிக்கிறேன்

சேனை பதிவுகளின்
மழையாய்...
இதயத்தில் பாசத்தின்
கதிராய்...
இணையத்தில் இமயத்தின்
நிஜமாய்
படைப்புகளோடு
கரம் கோர்த்து
நடைபழகும்
நண்பா...
சாதனை எனபது
உன் இயற்பெயரா...
ஐந்துக்கும்,பத்துக்கும்
பதிப்பதில்
அசந்தே போகும்
எங்களுக்குள்
எரிமலையாய் நீ...
தருவதிலும்
படைப்பதிலும்..
பாராட்டுவதிலும்
உனக்கு நிகர் நீயே.
சீதனமாய்
சாதனை உனக்குள்
ஓய்ந்துவிடாமல்
ஒளியாய் சேனைக்குள்...
எங்கள் பொறமை தீக்குள்
கருகாமல்
இன்னும் அணையா விளக்காய்...
சேனையின்
சோலைக்குள் மலராய்
சாதிக்கும் மனத்தின்
அருவியாய்...
நண்பா நீ
பயன் தருவாய் நீ ...
சாதனை எனபது
உன் சொந்தமா...
நீ அணியும்
சட்டையா...
உனக்கு மட்டுமே
பொருந்துகிறதே...
மழையை தேடும்
பூமியை போல்
சாதனை தேடும்
நண்பா நீ...
இன்னும் சாதிக்க
சாதனைக்கு
தோழனாய் வாழ
வாழ்த்துகிறேன்
நண்பா ,பாராட்டுக்கள்.


மனமார்ந்த வாழ்த்துகள் நண்பன்






