About Me

Thursday, May 3, 2012

கோடைவிடுமுறை இல்லை : வேகாத வெயிலில் புத்தக மூட்டைகளுடன் மாணவர்கள்

தேர்வுகள் முடிந்தும் கோடை விடுமுறை இல்லாமல் பள்ளிக்கு செல்லும் தொடக்கப்பள்ளி மாணவர்கள். வேகாத வெயிலில் புத்தக மூட்டைகளுடன் பள்ளிக்கு செல்கின்றனர்.

தேர்வுகள் முடிந்தது :

              தமிழகம் எங்கும் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 28 ந் தேதியுடன் தேர்வுகள் முடிந்துவிட்ட

து. இந்த பள்ளிகளில் உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஏப்ரல் 30 ந் தேதியுடன் கோடை விடுமுறை விடப்பட்டுவிட்டது. ஆனால் நடுநிலைப் பள்ளிகள், தொடக்கப்பள்ளிகளுக்கு மட்டும் தேர்வுகள் முடிந்துவிட்ட நிலையிலும் இன்னும் பள்ளிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

கோடை விடுமுறை விடப்பட்டாலும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் தேர்வுகள் முடிந்த பிறகும் பள்ளிகள் நடத்தப்படுவது பெற்றோர்களை கவலையடைய வைத்துள்ளது.

220 நாட்கள் பள்ளி :
    

  புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள தொடக்கப் பள்ளிகள் மற்றும் தமிழகம் எங்கும் உள்ள பல நூறு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

ஆசிரியர்கள் கூறும் போது. பல்வேறு  காரணங்களால் பள்ளி தொடங்குவதற்கு காலதாமதம் ஏற்பட்டது. அதே போல உள்ளூர் விடுமுறைகளும் வந்ததால் பள்ளி 220 நாட்கள் கண்டிப்பாக நடத்த வேண்டும் என்று அதிகாரிகள் கூறிவிட்டனர்.

அதனால் அந்த நாட்களை முடிப்பதற்காக தேர்வுகள் முடிந்தும் பள்ளிகளை நடத்த வேண்டியுள்ளது. கோடை வெயிலில் மாணவர்களுக்கு அம்மை போன்ற நோய்கள் வந்துவிடக்கூடாது என்பதற்காகத் தான் பள்ளி விடுமுறையே விடப்படுகிறது. ஆனால் அதிகாரிகள் சின்ன குழந்தைகளை இப்படி அவதிப்பட வைப்பது எங்களுக்கும் கவலை அளிக்கிறது.

மே. 10 வரை பள்ளி :

              அதிகாரிகள் நிர்ணயித்துள்ள காலம் 220 நாட்கள் முடிவடைய மே. 10 ந் தேதி வரை பாடம் நடத்தாமல் பள்ளிக்கு மாணவர்களை வரவைத்து திருப்பி அனுப்ப வேண்டும். பிறகு சூன் 1 ந் தேதி மீண்டும் பள்ளிகளை திறக்க வேண்டும். பல ஊர்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள் தான் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது. ஆனால் தொடக்கப்பள்ளிகள் பாடமே நடத்தாமல் இப்படி சும்மா வரவைப்பது இந்த ஆண்டு தான் புதுமையாக உள்ளது. ஆகவே அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து  சின்ன குழந்தைகளுக்கு நோய்கள் வராமல் தடுக்க விடுமுறை அறிவிக்க வேண்டும் என்றனர்.
உளவியல் பாதிப்பு :

              இது தொடர்பாக சில பெற்றோர்கள் கூறும் போது.. சின்ன குழந்தைகளான தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு வேனல் கால நோய்கள் பரவுவது ஒரு பக்கம் இருந்தாலும் இவர்களைவிட பெரிய மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள் வீட்டில் விளையாடும் போது இந்த அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள் மட்டும் பள்ளிக்கு செல்லும் போது இந்த மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு உளவியல் பாதிப்புகள் வரும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

கோடை விடுமுறை என்பதே ஆண்டு முழுவதும் பாடம் படித்து அழுத்திக் கொண்டிருக்கும் சுமைகளை குறைத்து மன அழுத்தத்தை குறைக்கத்தான். ஆனால் இப்போது இப்படி பள்ளி நடத்துவது மன அழுத்தம் ஏற்பட்டு உளவியல் பாதிப்பு தான் ஏற்படுத்தும். தமிழகம் எங்கும் இதே நிலை தான் உள்ளது ஆகவே தமிழக அரசு தலையிட்டு மாணவர்களுக்கு விடுமுறை விட செய்ய வேண்டும் என்றனர்.

SOURCE : NAKKEERAN

No comments: