About Me

Monday, August 13, 2012

குரூப்-2 வினாத்தாள் வெளியான விவகாரம்; பெண்ணிடம் விசாரணை ..



ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் ஒரு தேர்வு மையத்தில் நடந்த டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வின் வினாத்தாள் வெளியான விவகாரம் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தேர்வு எழுத வந்த இளம் பெண் ஒருவர் பிடிப்பட்டார். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

குரூப்-2 க்கான தேர்‌வு தமிழகம் முழுவதும் இன்று நடந்து வந்தது. இதில் 6.5 லட்சம் பேர் எழுதினர். முறைகேடுகளை தடுக்க பறக்கும்படை , வெப் கேமிரா ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஈரோட்டில் மொத்தம் 20,666 பேர், 75 மையங்களில் எழுதினர். இத்தேர்வில் 3732 பேர் ஆப்சென்டாகினர். இந்நிலையில் ஈரோடு பவானியைச் சேர்ந்த தனக்கொடி (26), என்ற இளம் பெண் தேர்வு எழுத வந்தார். முன்னதாக காலையில் ‌தனது தோழிகளுடன், கேள்வி இதுதான் வரும் என உறுதியாக தெரிவித்திருந்தார். பின்னர் இன்று தேர்வு முடிந்தவுடன் , ரேவதி, திவ்யா ஆகியோர், தனக்கொடி காலை சொன்ன கேள்விகள் அப்படியே வந்திருந்ததால் சந்தேகம் ஏற்பட்டது. உடன் தனக்கொடியை பிடித்து விசாரித்தனர். தனக்கொடி மீது சந்தேகம் ஏற்பட்டது. தொடர்ந்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர், கூறுகையில், காலையில் தனது கணவர் ஒரு ‌ஜெராக்ஸ் பிரதியை கொடுத்தார். அதில் ‌மொத்தம் 131-வது கேள்வியில் இருந்து 170 வரை உள்ள 40 கேள்விகளுக்கான பதிலுடன் அதில் இருந்தது. அதனை தான் தேர்வு அறையில் கொண்டுவந்ததாக கூறினார்.சம்பவம் அறிந்த ‌கலெக்டர், தனக்கொடியிடம் விசாரித்தார். பின்னர் ஆர்.டி.ஓ. சுகுமார், டி,.ஆர்.ஓ. கணேஷன், ஆகியோர் விசாரித்தனர். மேலும் வினாத்தாள் நகலை கொடுத்த தனக்கொடியின் கணவர் செந்திலை பிடிக்க போலீசாரை அனுப்பி வைத்துள்ளனர். அவர் பிடிபட்டதும் விடைத்தாள் வெளியான விவகாரத்தில் தொடர்புடையவர்கள் யார் என்ற விவரம் தெரியவரும்.

No comments: