About Me

Sunday, August 12, 2012

சுஷில் குமார் மல்யுத்தத்தில் வெள்ளிப்பதக்கம் வென்று புதிய வரலாறு படைத்தார் ..


லண்டன் ஒலிம்பிக் போட்டிகளில் 66 கிலோ எடைப்பிரிவு மல்யுத்த
போட்டியில் இந்தியாவின் சுஷில் குமார் வெள்ளிப்பதக்கத்தை
வென்றுள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து மூன்று போட்டிகளில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற சுஷில் குமார் ஜப்பானிய வீரர் யோனெமிட்சுவுடன் மோதினார். இதில் 3-1 என தோல்வி அடைந்த போதும் வெள்ளிப்பதக்கத்தை சுவீகரித்தார்.

இதன் மூலம், இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் அடுத்தடுத்து இரு முறை ஒலிம்பிக் போட்டிகளிலும் பதக்கம் வென்ற முதல் தனிநபர் போட்டி வீரர் எனும் சாதனையை படைத்துள்ளார். கடந்த பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் அவர் வெண்கல பதக்கத்தை சுவீகரித்தார்.

மேலும் மல்யுத்த போட்டிகளில் இந்தியாவுக்கு பதக்கம் பெற்றுக்கொடுத்த இரண்டாவது இந்திய வீரர் சுஷில் குமார். கடந்த 1952ம் ஆண்டு கஷபா தடஷெப் யாதவ் எனும் இந்திய வீரர் ஹெல்சின்கி ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார்.

தற்போது சுஷில் குமார் வென்ற பதக்கத்தை அடுத்து இந்தியா 2 வெள்ளி, 4 வெண்கலம் உட்பட மொத்தம் 6 பதக்கங்களை இம்முறை ஒலிம்பிக்கில் வென்றுள்ளது.
  வெள்ளிப் பதக்கம் வென்ற சுஷில் குமாருக்கு டெல்லி அரசு 1 கோடி ரூபாய் பரிசுத் தொகையை அறிவித்துள்ளது. ஹரியானா அரசு, ஒன்றரை கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருக்கிறது. மத்திய ரயில்வே அமைச்சர் முகுல்ராய் 75 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை அறிவித்திருக்கிறார்.

No comments: