About Me

Saturday, June 14, 2014

தேசிய கொடி நிறத்தில் வாக்காளர் அடையாள அட்டை!

தேர்தல் ஆணையம் தகவல்புதிதாக விண்ணப்பம் செய்த வாக்காளர்களுக்கும்
, கடந்த மார்ச் மாதம் விண்ணப்பம் செய்த 12 லட்சம் பேருக்கும் வண்ணத்திலான வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும். குறிப்பாக அதன் பின்னணி நிறம் இந்திய தேசிய கொடியின் நிறத்தை ஞாபகப்படுத்தும் வகையில் இருக்கும்.

தமிழகத்தில் மொத்தம் 5,50,42,876 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,75,18,373 ஆண் வாக்காளர்களும், 2,75,21,162 பெண்களும், மற்றவர்கள் 3,341 பேரும் அடங்கும். இவர்கள் அனைவருக் கும் கருப்பு வெள்ளை நிறத் தில் வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு, பதில் கலர் புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடை யாள அட்டை வழங்க தேர்தல் ஆணையம் கடந்த ஆண்டு ஆலோசனை நடத்தியது.

அதன்படி தற்போது அசாம் மாநிலம் மற்றும் புதுச்சேரி யில் வண்ணத்திலான வாக் காளர் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்திலும் கலர் அட்டை வழங்குவதற்கான டெண்டர் கோரப்பட்டிருந்தது. ஆனால், அதிக தொகை கேட்பதால் இந்த திட்டத்தை அமல்படுத்துவதில் காலதாமதம் ஏற்பட்டு வந்தது. மீண்டும் டெண்டர் கோரப்பட்டதில், ஒரு நிறுவனம் ஓரளவு குறைந்த விலை கேட்டுள்ளது. மேலும் விலையை குறைக்க தேர்தல் ஆணை யம் அந்நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அதன்படி, இனி யார் விண்ணப்பித்தாலும் அவர்களுக்கு வண்ணத்திலான வாக்காளர் அடை யாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் கூறியதாவது: தமிழகத்தில் புதிதாக வாக்காளர் அடையாள அட்டை கேட்டு விண்ணப்பம் செய்பவர்களுக்கு கலர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான பணியில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. கறுப்பு வெள்ளை அடையாள அட்டை தயாரிக்க மட்டும் ரூ.2 செலவாகிறது. கலர் அடையாள அட்டைக்கு இவ்வளவு பணம் என்பது குறித்து ஓரிரு நாட்களில் இறுதி செய்யப்பட்டு விடும். அதைத்தொடர்ந்து ஜூலை மாதம் இறுதிக்குள் புதிய வாக்காளர்களுக்கு கலர் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்.
மேலும், மக்களவை தேர்தலையொட்டி கடந்த மார்ச் 9ம் தேதி தமிழகத்தில் சிறப்பு முகாம் நடைபெற்றது. அன்றைய தினம் மட்டும் 10 லட்சம் பேரும், தேர்தலுக்கு முன் 2 லட்சம் பேர் என மொத்தம் 12 லட்சம் பேர் வாக்காளர் அடையாள அட்டைக்கான விண்ணப்பம் அளித்தனர். அவர்களுக்கு இன்னும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படவில்லை. 

அதனால் அந்த 12 லட்சம் பேருக்கும் ஜூலை மாதம் இறுதிக்குள் கலர் புகைப்படத்துடன் கூடிய அடை யாள அட்டை வழங்கும் பணிகள் தொடங்கும். தற்போது, கறுப்பு வெள்ளை படத்துடன் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பவர்களுக்கு வரும் காலங்களில் கலர் புகைப்படத்துடன் கூடிய அடை யாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

No comments: