அரசு பள்ளிகளில் 1:35 என்ற விகிதத்தில் ஆசிரியர் பணியிடங்களை மாற்றி அமைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய குழந்தைகள் கட்டாயக் கல்வி ஆணையம் சார்பில், ஒவ்வொரு மாவட்டத்திலும், குழந்தைகள் கல்வியின் அவசியம் குறித்த கருத்தரங்கு நடந்தது. டில்லியில் இருந்து வந்த ஆணைய உறுப்பினர், ஒன்றியம் வாரியாக நடந்த கருத்தரங்கில் பங்கேற்றார். இவர் நடத்திய ஆய்வில், பெரும்பாலான பள்ளிகளில் 50க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும், மாணவர்கள் வரத்து இல்லாத கிராமப்புற பள்ளிகளில் 20க்கும் குறைவான மாணவர்களுக்கு ஒரு ஆசிரியரும் பணியாற்றி வருவதை கண்டறிந்தார். அரசு உத்தரவு: இதையடுத்து, தேசிய குழந்தைகள் கட்டாய கல்வி ஆணையம், பள்ளிகளில் 1:35 என்ற மாணவர்கள் விகிதத்தில் ஆசிரியர் பணியிடம் நியமிக்க வேண்டும் என, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில் இந்த விகிதாச்சார முறைப்படி ஆசிரியர் பணியிடங்களை மாற்றி அமைக்குமாறு, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரிடமிருந்து தகவல் வந்துள்ளது. இது குறித்து கல்வி அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
No comments:
Post a Comment