காட்டுமன்னார்கோவில் : காட்டுமன்னார்கோவில் அடுத்த கஞ்சங்கொல்லை மேல்நிலைப் பள்ளியில் பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 50 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் அருகே கஞ்சங்கொல்லை அரசு மேல்நிலை பள்ளியில் 450 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். நேற்று மதியம் 150 மாணவ, மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டனர். கீரைத் தண்டு சாம்பார் சாதம், முட்டை வழங்கப்பட்டது. முதலில் சாப்பிட்ட 7ம் வகுப்பு மாணவன் மாதவன் மயங்கி விழுந் தான். தொடர்ந்து அடுத்தடுத்து மாணவ, மாணவிகள் மயங்கி விழுந்தனர். இதனால் பள்ளியில் பரபரப்பு ஏற்பட்டது. உடன் மதிய உணவை சோதனை செ#து பார்த்ததில் சாம்பாரில் பல்லி விழுந்திருப்பது தெரியவந்தது. மயக்கமடைந்த 50 மாணவ, மாணவிகளை வேன்கள் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதில் மாதவன், பாக்யராஜ், ஆஷா, பரியா, முருகன், உள்ளிட்ட 9 பேர் உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற 41 பேர் சிகிச்சை பெற்று திரும்பினர். மேலும், பள்ளியில் மருத்துவ முகாம் அமைத்து சிகிச்சையளிக்கப்பட்டது. தகவலறிந்த முதன்மை கல்வி அலுவலர் அமுதவல்லி, மாவட்ட கல்வி அலுவலர் பத்ரூ, காட்டுமன்னார்கோவில் ஒன்றிய பி.டி.ஓ., வாசுகி உள்ளிட்டோர் பாதிக்கப்பட்ட மாணவ, மாணவிகளிடம் சம்பவம் குறித்து விசாரித்தனர்.
No comments:
Post a Comment