மதுரை : பள்ளிக் கல்வித் துறையில் கவுன்சிலிங் நடத்தாமல் பணியிட மாறுதல் வழங்கப்படுகிறது என ஆசிரியர்கள் குற்றம் சாட்டினர்.ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் மே மாதம் இடமாறுதல், பதவி உயர்வு கவுன்சிலிங் நடக்கும். இந்தாண்டு புதிய அரசு பொறுப்பேற்றதும் கவுன்சிலிங் நடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. மூன்று மாதங்களாகியும் கவுன்சிலிங் நடக்கவில்லை. இதனால் இடமாறுதல், பதவி உயர்வை எதிர்பார்த்த ஆசிரியர்கள் மனம்புழுங்கினர். இந்நிலையில், கவுன்சிலிங் இன்றி ஆசிரியர்கள் இடமாறுதல் பெற்றுள்ளதாக ஆசிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செயலாளர் சுரேஷ், மாவட்ட நிர்வாகிகள் அனந்தராமன், திருஞானம் கூறியதாவது: பள்ளிக் கல்வித்துறை அமைச்சரின் அலுவலக ஒப்புதலுடன் அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கியுள்ளனர். காலி இடங்களுக்கு கவுன்சிலிங் நடத்தாமல் பணிமாறுதல் வழங்கியுள்ளனர். பணிமாறுதலுக்காக கவுன்சிலிங்கை எதிர்பார்த்தவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். முதல்வர் இப்பிரச்னையில் தலையிட்டு பணிமாறுதலை ரத்து செய்ய வேண்டும். கவுன்சிலிங் நடத்த உத்தரவிட வேண்டும், என்றனர்.
No comments:
Post a Comment