About Me

Saturday, September 24, 2011

பாதாம்பருப்பு என நினைத்து காட்டாமணக்கு விதையை தின்ற 26 மாணவர்கள் மயக்கம்: அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை

விழுப்புரத்தை அடுத்த ராம்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நலப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி வளாகத்தில் மதிய இடைவேளையின் போது மாணவ-மாணவிகள் விளையாடி கொண்டிருந்தனர். அந்த மாணவர்களில் சிலர் பாதாம்பருப்பு என நினைத்து பள்ளி அருகே வளர்ந்திருந்த காட்டா மணக்கு விதையை தின்றனர்.சிறிது நேரத்தில் 26 மாணவ-மாணவிகள் வாந்தியெடுத்து மயங்கி விழுந்தனர்.
 
இதனைக்கண்டு அதிர்ச்சி யடைந்த தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் துரிதகதியில் செயல்பட்டனர். பாதிக்கப்பட்ட மாணவர்களை அவர்கள் மீட்டு ஆம்புலன்சு மூலம் முண்டியம் பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். டாக்டர்கள் தீவிர சிகிச்சைக்கு பின் அந்த மாணவ-மாணவிகள் மயக்கம் தெளிந்தனர். அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 
 

No comments: