Wednesday, September 28, 2011

நமது பொது அறிவை அதிகப்படுத்தலாம் வாங்க. (பாகம் ‍ 3)

உலகின் மிக நீளமான ரயில்வே பிளாட்பாரம் இந்தியாவின் கரக்பூர் ரயில் நிலையமாகும். இதன் நீளம் 2,732 அடி.

உலகிலேயே மிகப்பெரிய மசூதி சிரியா நாட்டின் தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ளது.

உலகிலேயே மிகப்பெரிய ஏசுகிறிஸ்துவின் சிலை பிரேசில் நாட்டில் உள்ள ரியோடி ஜெனிரோ நகரில் அமைந்துள்ளது. இந்த சிலை 38 மீட்டர் உயரமும், 700 டன் எடையும் கொண்டது.


உலகிலேயே பெண்களுக்கு வாக்குரிமை அளித்த முதல் நாடு நியூசிலாந்து. 1893ஆம் ஆண்டு தான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது.

உலகிலேயே அதிக ஆண்டுகள் பிரதமராக இருந்தவர் சிங்கப்பூர் பிரதமர் லீ குவான் யூ. இவர் 1959 முதல் 1990 வரை பிரதமராக இருந்தார்.

உலகின் மிகப்பெரிய தேவாலயம் ஆப்ரிக்காவில் உள்ள ஐவரி கோஸ்ட்டில் உள்ளது.

உலகிலேயே மிகவும் நீளமான நெடுஞ்சாலை பான் - அமெரிக்கன் நெடுஞ்சாலை. இதன் நீளம் 24,140 கி.மீ.

உலகின் முதல் குடியரசு நாடு ஆஸ்திரியா.

உலகின் மிகப்பெரிய தீவுக்கூட்டம் இந்தோனேஷியாவில் உள்ளது.

உலகின் மிகப்பெரிய தீவு கிரீன்லாந்து.

உலகின் மிகப்பெரிய பாலைவனம் சகாரா பாலைவனமாகும்.

உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் தென் அரேபியாவின் ரியாத் பன்னாட்டு விமான நிலையமாகும்.
நாம‌் ‌சில மு‌க்‌கிய அமை‌ப்புகளை‌ப் ப‌ற்‌றி அ‌திக‌ம் கே‌ட்டிரு‌ப்போ‌ம். ஆனா‌ல் அவை கு‌றி‌ப்பாக எ‌ங்கு உ‌ள்ளன எ‌ன்று அ‌றியாம‌ல் இரு‌க்கலா‌ம். அ‌ந்த வகை‌யி‌ல், ‌சில மு‌க்‌கியமான அமை‌ப்புக‌ள் எ‌ங்கு உ‌ள்ளன எ‌ன்பதை இ‌ங்கு ‌சி‌றிய அள‌வி‌ல் தொகு‌த்து‌ள்ளோ‌ம்.

மகாபலேஸ்வரர் கோயில் மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜையினி நகரில் உள்ளது.

சுந்தரவனக் காடுகள் மேற்குவங்கத்தில் உள்ளன.

சூரியக் கோயில் கோனார்க்கில் அமைந்துள்ளது.

ஜோக் (ஜெரசப்பா) நீர்வீழ்ச்சி கர்நாடகாவில் உள்ளது.

பிரிட்டிஷ் பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லம் அமைந்துள்ள இடம் எண்.10, டவுனிங் தெரு.

நயாகரா நீர்வீழ்ச்சி அமெரிக்கா, கனடா ஆகிய இரு நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது.

சிவபுரி தேசியப் பூங்கா மத்தியப்பிரதேசத்தில் உள்ளது.

இ‌ந்‌திய அணுச‌க்‌தி‌க் கழக‌ம் மு‌ம்பை‌யி‌ல் அமை‌ந்து‌ள்ளது.

உல‌கிலேய ‌மிக‌ப் பழமையான ப‌ல்கலை‌க்கழக‌ம் ‌ஸ்‌வீட‌ன் நா‌ட்டி‌ல் உ‌ள்ளது.

சா‌ர்‌க் அமை‌ப்‌பி‌ன் தலைமையக‌ம் நேபாள‌ம் தலைநகர‌் கா‌த்மா‌ண்டு‌வி‌ல் அமை‌ந்து‌ள்ளது.

கிளியின் சராசரி ஆயுட்காலம் 50 ஆண்டுகள். அறுநூறுக்கும் மேற்பட்ட விதவிதமான கிளிகள் உள்ளன. கிளியால் தன் அலகுகளின் மேல் அலகை மட்டுமே அசைக்க முடியும். கேட்கும் சக்தி அதிகம். கிளி ஓராண்டிற்கு ஒரு முட்டை மட்டுமே இடும். பெரும்பாலான பறவைகளுக்கு அதன் கால் விரல்களில் மூன்று முன்னோக்கியும், ஒன்று மட்டும் பின்னோக்கியும் இருக்கும். ஆனால், கிளிகளுக்கு இரண்டு விரல்கள் முன்னோக்கியும், இரண்டு விரல்கள் பின்னோக்கியும் இருக்கும். கியா என்ற பெயர் கொண்ட ஆஸ்திரேலியா கிளிகள் மாமிசம் தின்பவை.

தென் அமெரிக்காவில் உள்ள அமேசான் நதியில் வாழும் ஒருவித மஞ்சள் நிற மீனைத் தின்னும். பச்சை நிற கிளி குஞ்சுகள் நாளடைவில் மஞ்சள், பச்சை, சிகப்பு ஆகிய நிறங்களுடன் பஞ்சவர்ண கிளிகளாக மாறிவிடுகின்றன.

ஆடு ஏழைகளின் பசு என்று போற்றப்படுகிறது. ஆட்டுப் பாலில் கிருமிகள் இல்லை. ஆனால், பசும்பால் அப்படியில்லை. பசும் பாலைக் காய்ச்சிதான் குடிக்க வேண்டும். பெண் ஆடுகள் இரண்டு வயதுக்குள் முழு வளர்ச்சி அடைகிறது. ஆனால், ஆண், ஆடுகள் நான்கு வருடங்கள் எடுத்துக் கொள்கின்றன. ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம் மட்டுமே தூங்கும். கர்ப்ப காலம் 151 நாட்கள். சுமார் எட்டு ஆண்டுகள் வரை வாழும். வெள்ளாட்டுப் பாலில் அதிக அளவு சுண்ணாம்பு சத்து உள்ளது. மலை ஆடுகள் பிறந்த 30 நிமிடத்திலேயே எழுந்து அருகில் உள்ள மலை உச்சிக்கு நடந்து செல்லும் அளவிற்கு உடல் வலிமைக் கொண்டது.

அமெரிக்காவின் ஆளுமை மையம் என்பது உலக புகழ்பெற்ற வெள்ளை மாளிகை. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை வருடா வருடம் அதிகாரப்பூர்வமாக ஒரு காலண்டரை வெளியிடுகிறது தெரியுமா!

அந்த காலண்டரில் இடம் பெற்றிருக்கும் ஒரே ஒரு இந்தியப் பண்டிகை "தீபாவளி" மட்டும் தான்!

உலகில் பெருங்கடல் பற்றிய ஆராய்ச்சியை முதன்முதலில் மேற்கொண்ட கப்பல் -சாலஞ்சர் (1872-1876).

உலகிலேயே மிகப்பெரிய பனியாறு உள்ள இடம் -யாகூட் வளைகுடா (அலாஸ்கா).

உலகின் முதன்முதலில் நில நடுக்கம் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் -சீனர்கள்.

உலகிலேயே மிகப்பெரிய எரிமலையாக கருதப்படுவது - மோனலோவா (ஹவாய்).

உலகிலேயே மிகப்பெரிய எரிமலை பிரதேசம் - தக்காண பீடபூமி.

உலக வனவிலங்கு பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ள இடம் - மார்கீஸ் (சுவிட்சர்லாந்து).

உலகிலேயே எரிமலை வெப்ப சக்தியை வீட்டு அறை வெப்பத்திற்காக பயன்படுத்தும் ஒரே இடம் - ரெய்ஜாவிக் (ஐஸ்லாந்து).


உலகின் முதல் பல்கலைக்கழகம் - தட்சசீலம் (கி.மு.700).

ஓசோன் பாதுகாப்பிற்காக விண்ணில் ராக்கெட் ஏவிய நாடு -அமெரிக்கா (நாசா 1991).

முதன்முதலில் நிலவின் மறுபக்கத்தை படம்பிடித்த நாடு - ரஷ்யா (லூனா3 -1959)

உலகில் தக்காளி அதிகளவில் பயிரிடப்படும் நாடு அமெரிக்கா.

உலகில் அதிக அரசியல் கட்சிகளைக் கொண்ட நாடு இந்தியா.

உலகில் ரயில் போக்குவரத்தே இல்லாத நாடு ஆப்கானிஸ்தான்.

உலகிலேயே அதிக அளவில் மீன்பிடிக்கும் நாடு ஜப்பான்.

உலகின் மிகப்பெரிய சட்டசபை உள்ள நாடு சீனா.

உலகின் மிகப்பெரிய தீபகற்பம் அரேபியா.

உலகின் கூரை என்று அழைக்கப்படும் நாடு பாமீர்.

உலகிலேயே வைரம் அதிகமாக கிடைக்கும் நாடு ஆப்பிரிக்கா

உலகிலேயே பட்டு அதிகமாக ஏற்றுமதியாகும் நாடு சீனா.

பல இணைய பக்கங்களில் இருந்து தொகுக்கப்பட்டது.

தவறுகள் இருந்தால் தெரிவிக்கும்படி அன்புடன் வேண்டுகிறேன்.

No comments:

4tamilmedia