பூத் சிலிப் கையொப்பம் இடுவதில், தேர்தல் அதிகாரிகளுக்கு, கமிஷன் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
அரசியல் கட்சியினர், வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதைத் தடுக்க, சட்டசபைத் தேர்தலில், வாக்காளர்களுக்கு தேர்தல் கமிஷனே நேரடியாக பூத் சிலிப் வழங்கியது. இதனால், ஓட்டளித்த வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. அந்த பூத் சிலிப்பில், தேர்தல் நடத்தும் அதிகாரி கையெழுத்திட்டு வழங்கினார்.
இதில், சுணக்கம் ஏற்பட்டதால், சில இடங்களில் வாக்காளர்களுக்கு, பூத் சிலிப் தாமதமாக வினியோகம் செய்யப்பட்டது. சில இடங்களில், வாக்காளர்களுக்கு வழங்கப்பட்ட பூத் சிலிப் தொலைந்து விட்டதாகத் தெரிவித்தவர்களுக்கு, பூத் சிலிப் நகல் எடுத்துத் தரப்பட்டதால், பல இடங்களில் குழப்பம் ஏற்பட்டது.
உள்ளாட்சித் தேர்தலில் பூத் சிலிப் வழங்குவதில் தாமதத்தைத் தவிர்க்க, இம்முறை மாநகராட்சி, நகராட்சிகளில் கமிஷனர்கள் பூத் சிலிப்பில் கையெழுத்திடவும், கிராமப்புறங்களில் வட்டார வளர்ச்சி அலுவலர் கையெழுத்திடவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக, அதிகாரிகளின் கையெழுத்துகளை ஸ்கேன் செய்து, தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்க, மாவட்ட அதிகாரிகளுக்கு கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
"ஸ்கேன் செய்து பூத் சிலிப்பில் பதிவு செய்து அனுப்புவதை, நகல் எடுக்கக் கூடாது. வாக்காளர்கள் பூத் சிலிப்பை தவற விட்டால், புதிய சிலிப் வழங்கக் கூடாது" என, தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.
நன்றி:
No comments:
Post a Comment