சென்னை, அக்.15 (டிஎன்எஸ்) அரசுத் தேர்வுப் பணிகளில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று (அக்.14) திடீர் சோதனை நடத்தினார்கள். உதவிப் பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப்-1 தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி சோதனையை மேற் கொண்டனர். click here to detail news
தேர்வாணைய தலைவர் 13 உறுப்பினர்களின் வீடுகளில் காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை சுமார் 9 மணி நேரம் நீடித்தது. இதையடுத்து டி.எஸ்.பி.க்கள் நடராஜன், சரஸ்வதி, வல்ஸ்ராஜா ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கிரீம்ஸ் சாலையில் உள்ள அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் சோதனை நடத்தினார்கள். அனைவரது அறைகளிலும் இந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டன. திருச்சியில் தேர்வாணைய உறுப்பினர் டாக்டர் பன்னீர் செல்வத்தின் வீட்டில் மாலை 5 மணி வரை சோதனை நடந்திய லஞ்ச ஒழிப்பு போலீசார் வங்கி கணக்கு புத்தகங்கள், வங்கி லாக்கர் சாவி, வீட்டு பத்திரங்கள் உள்ளிட்ட 35 ஆவணங்கள் கைப்பற்றி எடுத்து சென்றனர்.
அதன் பிறகு லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணையை தொடங்கினார்கள். நேற்று மாலை 4 மணியளவில் தேர்வாணைய உறுப்பினர்கள் செல்வமணி, ரத்தின சபாபதி, ராமசாமி, சங்கரலிங்கம், கே.கே.ராஜா, ஷோபினி ஆகியோர் டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டனர். மாலை 6.20 மணிக்கு தேர்வாணைய தலைவர் செல்லமுத்து விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் இரவு 8.30 மணி வரை விசாரணை நடந்தது. இதையடுத்து மற்ற தேர்வாணைய உறுப்பினர்களை டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்துக்கு வரவழைத்து போலீசார் விசாரித்தனர்.
இந்த விசாரணை விடிய, விடிய நடந்தது. இன்று அதிகாலை தான் விசாரணை முடிந்தது. இன்று (அக்.15) இரண்டாவது நாளாக தேர்வாணைய உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது.
தேர்வுகள் நடத்தப்பட்ட விதம், முடிவுகள், பணி நியமனங்கள் உள்பட பல்வேறு விவரங்களை அவர்களிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் பயன்படுத்திய கம்ப்யூட்டர்களில் உள்ள தகவல்களை போலீசார் சேகரித்தனர். அந்த தகவல்கள் குறித்தும் தேர்வாணைய உறுப்பினர்களிடம் விசாரணை நடந்தது. இதன் மூலம் அரசுத் தேர்வுப் பணிகளில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சப்-கலெக்டர், போலீஸ் துணை சூப்பிரண்டு பதவிகள் உள்பட 6 முக்கிய பதவிகளுக்கான ஆள் தேர்வில்தான் லட்சக்கணக்கில் லஞ்சப் பணம் கை மாறியுள்ளது. தேர்வாணைய தலைவர், 13 உறுப்பினர்களின் வீடுகளில் நேற்று நடந்த சோதனையின் போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் மலைக்கும் வகையில் ரொக்கப்பணம், நகைகள், கணக்கில் காட்டாத சொத்து ஆவணங்கள் கண்டெடுக்கப்பட்டன. இவ்வளவு ஆதாரங்கள் சிக்கும் என்று லஞ்ச ஒழிப்பு போலீசாரே எதிர்பார்க்கவில்லை.
பொதுவாக அரசியல் பிரமுகர்கள் வீடுகளுக்கு லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்த சென்றால், அது பற்றிய தகவல்களை முன்பே தெரிந்து கொள்ளும் அரசியல்வாதிகள், பணம், ஆவணங்களை பதுக்கி விடுவார்கள். ஆனால் தேர்வாணைய உறுப்பினர்கள் இப்படி ஒரு சோதனை வரும் என்று எதிர்பார்க்கவில்லை என்பதால் அவர்களது முறைகேடுகள், சொத்து குவிப்பு போன்றவை ஆதாரங்களுடன் சிக்கிவிட்டன. இவற்றை கணக்கிடும் பணி தற்போது நடந்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி தேர்வாணைய உறுப்பினர்களின் முறைகேடுகள் பல கோடியை கடந்துவிட்டது. தேர்வாணைய உறுப்பினர்கள் எல்லோரது வீட்டிலும் அளவுக்கு அதிகமான சொத்து பட்டாக்கள், ரொக்கப்பணம், முறைகேடுக்கு பயன்படுத்தும் ஆவணங்கள் ஏராளமாக இருந்தன. உறுப்பினர் சண்முக முருகன் வீட்டில் ரொக்கமாக ரூ.17 லட்சம் இருந்தது கண்டு போலீசார் ஆச்சரியப்பட்டனர்.
டெய்லர்ஸ் ரோடு டவர் பிளாக்கில் வசிக்கும் சேவியர் ஜேசுராஜ் வீட்டில் ரூ.7 லட்சத்துக்கு ஒரு கணக்கு வரவு வைக்கப்பட்டிருந்தது. அவர் ஸ்ரீபெரும்புதூரில் ஏராளமாக நிலம் வாங்கி வைத்திருப்பதை டி.எஸ்.பி.பொன்னுசாமி தலைமையிலான போலீஸ் படை கண்டுபிடித்தது. அடிக்கடி வெளிநாடு சென்று வந்துள்ள சேவியர் ஜேசுராஜ் வீட்டில் வங்கி புத்தகங்கள் பல இருந்தன. அதுபோல தேர்வாணைய தலைவர் செல்லமுத்து வீட்டில் நிரப்பப்படாத செக்குகள் பல கிடைத்தன.
தேர்வாணைய உறுப்பினர்களின் வீடுகளில் அரசு பணி தேர்வுக்கான மதிப்பெண் பட்டியல்கள், ஆன்சர் கீ, கம்ப்யூட்டர் அளித்த தேர்வுப்பட்டியல், தேர்வுக்கான அழைப்புக்கடிதங்கள், ஹால் டிக்கெட்டுள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை வைத்து தேர்வாணைய உறுப்பினர்கள் லட்சம், லட்சமான சம்பாதித்துள்ளனர். இந்த முறைகேடுககள் ஆதாரப்பூர்வமாக உறுதி படுத்தப்பட்டுள்ளதால் விரைவில் கைது நடவடிக்கை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. (டிஎன்எஸ்)

thanks :
No comments:
Post a Comment