கல்வி பயிலும் மாணவ, மாணவியரை பாதுகாக்கும் வகையில், ஒவ்வொரு பள்ளியிலும், "சிறப்பு பாதுகாப்பு படை' ஏற்படுத்த, பள்ளிக்கல்வி இயக்குனர் மணி உத்தரவிட்டுள்ளார். மாவட்ட சி.இ.ஓ.,க்களுக்கு, அவர் அனுப்பியுள்ள கடிதம்: பள்ளியில் பயிலும், அனைத்து மாணவர்களின் பாதுகாப்பு மிக முக்கியானது என்பதை கருத்தில் கொண்டு, "சிறப்பு பாதுகாப்பு படை' ஏற்படுத்த வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் உடற்கல்வி ஆசிரியர்கள், என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், என்.சி.சி., மற்றும் இளஞ்செஞ்சிலுவை சங்க பொறுப்பாசிரியர்களைக் கொண்டு, சிறப்பு பாதுகாப்பு படையை அமைக்க வேண்டும். இவர்களுக்கு, போலீசார், தீயணைப்புத் துறையினர் மூலமாக, சிறப்பு பயிற்சியளிக்க வேண்டும்.
பயிற்சி பெற்ற "சிறப்பு பாதுகாப்பு படை' ஆசிரியர்கள் மூலமாக, பள்ளியில் செயல்படும் என்.எஸ்.எஸ்., சாரணர் இயக்கம், என்.சி.சி., மற்றும் இளஞ்செஞ்சிலுவை சங்க மாணவர்களுக்கும், அவர்கள் மூலம் பிற மாணவர்களுக்கும், போக்குவரத்து விதிகள், சுய பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்க வேண்டும். இது, சம்பந்தமாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்த அறிக்கையை, இயக்குனருக்கு அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் மணி தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment