About Me

Wednesday, June 29, 2011

உங்கள் பெயரை அனிமேட் செய்யணுமா?

உங்கள் பெயரை அனிமேட் செய்யணுமா? அதுக்கு நீங்க செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். அது தான் கீழ்கண்ட சுட்டியை தட்டுவது வேறென்ன.

http://textanim.com/

It's my daughter's name 




மாணவர்களை அடித்தால் நடவடிக்கை பள்ளி ஆசிரியர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் தீபக் என்ற மாணவனை ஆசிரியர் பிரம்பால் அடித்ததில் கண் பாதித்துள்ளதாக புகார் எழுந்தது. இது பற்றி மாணவனின் பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.இதுபற்றி பள்ளிக் கல்வி அமைச்சர் சி.வி.சண்முகத்திடம் நிருபர்கள் கேட்டதற்கு அவர் கூறியதாவது:​ மாணவர்களை அடித்து தண்டிப்பதற்கு ஏற்கனவே தடை செய்யப்பட்டுள்ளது. தவறு செய்யும் மாணவர்களை அடிக்காமல் திருத்துவதற்கு தெளிவான வழிமுறைகள் இருக்கின்றன. அவற்றை பள்ளி ஆசிரியர்கள் பின்பற்ற வேண்டும். மாணவர்களை முறைப்படுத்த வழி முறைகள் அரசால் வகுக்கப்பட்டுள்ளது. அதை பின்பற்ற வேண்டும். ஆசிரியர்கள் அதை பின்பற்றாமல் பிரம்பால் அடிப்பது, துன்புறுத்துவதை நியாயப்படுத்த இயலாது. மாணவர்களை அடித்து துன்புறுத்தும் பள்ளிகள் மீதும் ஆசிரியர்கள் மீதும் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழ்நாடு பள்ளிக்கூட விதிகள் 51-வது பிரிவு மாணவர்களை அடிக்கின்ற உரிமையை கொடுக்கிறது. அந்த விதி 2007-ம் ஆண்டு ஜனவரி மாதம் நீக்கப்பட்டு விட்டது. எனவே மாணவர்களை அடிக்கின்ற உரிமை ஆசிரியர்களுக்கு கிடையாது.
இவ்வாறு அவர் கூறினார். 


நன்றி: http://www.crsttp.blogspot.com/

அரசு ஊழியர்களுடன் நல்லுறவு: வதந்திகளை நம்பாதிருக்க யோசனை

அரசு ஊழியர் சங்கங்களின் பிரதிநிதிகளை அழைத்துப் பேசிய உயரதிகாரிகள், இந்த ஆட்சி, அரசு ஊழியர்களுக்கு எதிரானது அல்ல என்றும், வதந்திகளை நம்பவேண்டாமென்றும் உத்தரவாதம் அளித்தனர்.


அங்கீகரிக்கப்பட்ட அரசு ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகளை, தமிழக அரசின் பொதுத் துறை செயலர், பணியாளர் நலத்துறை செயலர் அழைத்துப் பேசினர். இதில், தலைமைச் செயலக சங்கம், "சி அண்டு டி' பிரிவு ஊழியர்கள் சங்கம், என்.ஜி.ஓ., சங்கம் உட்பட முக்கிய சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது, "அரசு ஊழியர்களுக்கு எதிரான அரசு என்பது போன்ற தோற்றம் உருவாக்கப்படுகிறது. ஆனால், இந்த அரசு, ஊழியர்களுடன் நல்லுறவையே விரும்புகிறது' என்று அதிகாரிகள் உறுதியளித்தனர். 

"முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு டிஸ்மிஸ் செய்யப்பட்ட ஊழியர்கள் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும், ஈட்டு விடுப்பு எண்ணிக்கையை குறைக்க உள்ளதாகவும். சனிக்கிழமைகளை பணி நாளாக அறிவிக்க இருப்பதாகவும் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. அவற்றை நம்ப வேண்டாம். எவ்வித எதிரான நடவடிக்கையை எடுக்கும் எண்ணம் இந்த அரசுக்கு இல்லை" என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


அரசின் இந்த கருத்தை தங்களது சங்கத்தில் உள்ள அனைத்து ஊழியர்களுக்கும் தெரியப்படுத்துமாறு கேட்டுக் கொண்டனர். அரசு ஊழியர்கள் நன்றாக செயல்பட்டால் தான், திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க முடியும் என்றும், அரசு ஊழியர்கள், இந்த அரசுக்கு நல்ல பெயர் பெற்றுத் தர வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டனர். 

அரசு ஊழியர்களது நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும், கோரிக்கைகள் பற்றி இன்னொரு நாளில் பேசலாம் என்றும், சலுகைகள் குறித்து பட்ஜெட் சமயத்தில் முதல்வர் முடிவெடுப்பார் என்றும் கூறினர். ஊழியர் சங்க நிர்வாகிகளும், தங்களுக்கு இந்த அரசு மீது எவ்வித கசப்புணர்வும் இல்லை என்றும், அரசின் செயல்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவோம் என்றும் உறுதியளித்தனர்.
நன்றி


& http://tiaskk.blogspot.com/

viwers history





Monday, June 27, 2011

அரசு ஊழியர்களுக்கு இன்சூரன்ஸ் திட்டம் நீடிப்பு : அடுத்த ஆண்டு புது நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பொதுமக்களுக்கான, "கலைஞர் மருத்துவ காப்பீடு திட்டம்' நிறுத்தப்பட்டுள்ள நிலையில், அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டம், அடுத்த ஆண்டு ஜூன் வரை தொடர உள்ளது. அதற்குள், டெண்டர் விடப்பட்டு, புதிய காப்பீட்டு நிறுவனம் இறுதி செய்யப்படும். 

அரசு ஊழியர்களுக்கு ஏற்கனவே, "தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சுகாதார நிதி திட்டம்' என்ற திட்டத்தின் கீழ், மருத்துவ சிகிச்சைக்கான செலவுகள் வழங்கப்பட்டு வந்தன. இதன்படி, அரசு ஊழியர்களின் சம்பளத்தில் மாதம் 10 ரூபாய் பிடித்தம் செய்யப்பட்டது.

இந்நிலையில், 2008ல், "புதிய மருத்துவ காப்பீடு திட்டம்' என்ற திட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்தது. இதன் காரணமாக, பழைய சுகாதார திட்டம் நிறுத்தப்பட்டது. புதிய திட்டத்துக்காக விடப்பட்ட டெண்டரில், "ஸ்டார் ஹெல்த் அண்டு அலைய்டு இன்சூரன்ஸ் கம்பெனி' குறைந்த விலையை குறிப்பிட்டிருந்தது. எனினும், அதற்கு அடுத்தபடியாக விலை குறிப்பிட்டிருந்த, "ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ்' நிறுவனத்தையும் அழைத்து அரசு பேசியது. இறுதியில், ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ் நிறுவனத்திடமே இத்திட்டம் ஒப்படைக்கப்பட்டது. 

இதன்படி, ஆண்டுக்கு 495 ரூபாய் பிரீமியமாக நான்கு ஆண்டுகளுக்கு செலுத்த வேண்டும். இதுதவிர, சேவை வரியை செலுத்த வேண்டும். இதற்காக, அரசு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் ஊழியர்கள், பள்ளி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள், ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் போன்றோர் இதில் கண்டிப்பாக சேர உத்தரவிடப்பட்டது. ஊழியர்களிடம் இருந்து மாதம் 25 ரூபாய் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படுகிறது. மீதத் தொகை மற்றும் 12.5 சதவீத சேவை வரியை அந்தந்த துறையே செலுத்த வேண்டும்.

ஊழியரின் மனைவி அல்லது கணவர், குழந்தைகள் (திருமணமாகும் வரை அல்லது வேலையில் சேரும் வரை அல்லது 25 வயது வரை), திருமணமாகாத ஊழியரின் பெற்றோர் ஆகியோர் இத்திட்டத்தின் கீழ் சிகிச்சை பெறலாம்.
மொத்தமாக நான்கு ஆண்டுகளில், 2 லட்சம் ரூபாய்க்கு, இன்சூரன்ஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம். மருந்துகள், அறுவை சிகிச்சை, டாக்டர் கட்டணம், தங்கும் அறை கட்டணம் உட்பட பல்வேறு மருத்துவ செலவுகளுக்கு இத்திட்டத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். 

இத்திட்டம் 2008ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாளான ஜூன் 3ம் தேதி அமலுக்கு வந்தது. இதன்படி, அடுத்த ஆண்டு ஜூன் மாதத்துடன் நான்கு ஆண்டுகள் முடிவடைகிறது. எனவே, அதுவரை, "ஸ்டார் ஹெல்த் இன்சூரன்ஸ்' நிறுவனமே இத்திட்டத்தை தொடர அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி உயரதிகாரி ஒருவர் கூறும் போது, "அடுத்த ஆண்டு, தமிழக அரசு டெண்டர் விட உள்ளது. அதில், புதிய மருத்துவ காப்பீட்டு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு ஜூன் முதல் புதிய நிறுவனம் மூலம், இத்திட்டம் தொடர உள்ளது. எக்காரணம் கொண்டும் திட்டம் நிறுத்தப்படாது' என்றார். இதே ஸ்டார் ஹெல்த் நிறுவனம் செயல்படுத்தி வரும், பொதுமக்களுக்கான மருத்துவ காப்பீடு திட்டத்தை புதிய அரசு நிறுத்தியுள்ளது. இதனால், தங்களுக்கும் இத்திட்டம் நிறுத்தப்படும் என்ற அச்சம் அரசு ஊழியர்களிடையே நிலவியது. ஆனால், ஏற்கனவே நான்கு ஆண்டுகளுக்கு என கணக்கிட்டு, பிரீமியம் செலுத்தப்பட்டு வருவதால், அரசு ஊழியர்களுக்கான திட்டத்தை நிறுத்த தமிழக அரசு விரும்பவில்லை.

எனினும், பொதுமக்களுக்கான கலைஞர் காப்பீட்டுத் திட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இத்திட்டப்படி, நான்கு ஆண்டுகளுக்குள் ஒரு குடும்பம் ஒரு லட்சம் ரூபாய் வரையிலான மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ளலாம். தற்போது இத்திட்டம் நிறுத்தப்பட்டுள்ளதால், ஏற்கனவே செலுத்திய பிரீமியத் தொகையில், இந்த மாதம் வரையிலான காலத்தைக் கழித்துவிட்டு, மீதத்தை அந்த நிறுவனத்திடம் இருந்து திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. அதேநேரத்தில், நிறுத்தப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டத்துக்கு பதிலாக, விரைவில் புதிய காப்பீடு திட்டத்தை கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.

நன்றி


டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்கள் கற்பித்தல்: எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவு

பள்ளிகளில் டி.வி.டி, சி.டிக்கள் மூலம் பாடங்களை கற்பிக்கவும், நாடகம், வில்லுப் பாட்டுகள் நடத்தவும் எஜூசாட் மூலம் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது. 


தமிழகத்தில் 1 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி முறை அமல்படுத்தப்பட்டது. பிற வகுப்புகளில் எந்த பாடத் திட்டம் என்பது தொடர்பாக குழப்பம் நீடிப்பதால் பாட புத்தகங்கள் இல்லாமலேயே வகுப்புகள் நடந்து வருகிறது. எனினும், குழந்தை மைய இணைப்பு பயிற்சி மூலம் பள்ளிகளில் பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கான அட்டவணைகளும் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளிகளில் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை மாணவர்கள், ஆசிரியர்கள் விபரம், கால அட்டவணை, டி.வி சி.டிக்கள் உட்பட பல்வேறு வசதிகள் குறித்து பள்ளி பார்வையும் நடத்தப்பட்டு இதற்கான அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து குழந்தை மைய இணைப்பு பயிற்சி தொடர்பாக எஜூசாட் மூலம் வீடியோ கான்பரன்சிங் ஆலோசனை நேற்று தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நடந்தது. இதனை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட இயக்குனர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் நடத்தினார்.
 
இதில் குழந்தை மைய இணைப்பு பயிற்சி, கால அட்டவணை தவிர பிற வசதிகளை பயன்படுத்தி பள்ளிகளில் வகுப்புகளை நடத்த அறிவுரை வழங்கப்பட்டது. புத்தக பூங்கொத்து திட்டத்தின் கீழ் அனைத்து பாடங்களுக்கும் வழங்கப்பட்ட புத்தகங்கள் மூலம் வினாடி வினா, கதை கூறுதல், விவாதம் நடத்துதல், குழு விவாதம், நாடகம், வில்லுப்பாட்டு, தானே கற்றல் கணித உபகரண பெட்டி பயன்படுத்தி கணித பாட அடிப்படை செயல்பாடுகளை நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. 

பள்ளிகளில் டிவி, டி.வி.டி பிளேயர், சி.டிக்கள், கம்ப்யூட்டர்கள், லேப்டாப்கள் பயன்படுத்தி "ஹலோ இங்கிலீஷ்', சிம்பிள் இங்கிலீஷ், பன் வித் இங்கிலீஷ் போன்ற கேசட்கள் மூலம் ஆங்கில பாடம் கற்பிக்க வேண்டும், கம்ப்யூட்டர வழி கல்வியை தீவிரப்படுத்தவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.


மேலும், மாணவர்களை அருகில் உள்ள இடங்களுக்கு கள ஆய்வு அழைத்து சென்று வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கு அழைத்து செல்லுதல், போஸ்ட் ஆபீஸ் மற்றும் பிற அலுவலகங்களுக்கு அழைத்து சென்று செயல்பாடுகள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு தெரிவிக்க அறிவுரை வழங்கப்பட்டது. எழுத்து பயிற்சி, பேச்சு பயிற்சி, வாசிப்பு பயிற்சியை மேம்படுத்தவும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. 

இப்பணிகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர்கள், ஆசிரிய பயிற்றுனர்கள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர்கள், முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளிகளுக்கு ஆய்வு சென்று கண்காணிக்க வேண்டும் என்றும் அறிவுரை வழங்கப்பட்டது.

நன்றி


ஒரே கல்வியாண்டில் யு.ஜி. பி.ஜி முடித்தவர்களுக்கு தமிழக அரசு புது சலுகை

பதிவு செய்த நாள் : ஜூன் 02,2011,01:12 IST
தூத்துக்குடி : பி.எஸ்.சி பி.எட் (கணிதம்) பட்ட படிப்பை முடித்த இடைநிலை ஆசிரியர் ஒரே பல்கலைக்கழகத்தில் பி.ஏ (ஆங்கிலம்) மற்றும் எம்.ஏ அட்டவணையில் படித்து முடித்தால், ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் எம்.ஏ (ஆங்கிலம்) பட்டப்படிப்பு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் (பி.ஜி டீச்சர்) பதவி உயர்வுக்கு தகுதியானவர் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பள்ளி கல்வி இயக்குநர் விடுத்துள்ள சுற்றறிக்கை 26081ல் கூறப்பட்டிருப்பதாவது; பி.லிட் (தமிழ்) முடித்த இடைநிலை ஆசிரியர் ஒருவர் தொலை நிலைக்கல்வி மூலம் ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில், வெவ்வெறு பல்கலைக்கழகங்களில் இளங்கலை அறிவியல் பி.எஸ்.சி (கணிதம்) மற்றும் பி.எட் படித்து முடித்தால் அவர் கணித பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவராக கருதப்படுவார். பி.எஸ்.சி (கணிதம்) பி.எட் பட்டப்படிப்பை முடித்த இடைநிலை ஆசிரியர் ஒரே பல்கலைக்கழகத்தில் பி.ஏ (ஆங்கிலம்) மற்றும் எம்.ஏ (ஆங்கிலம்) பட்டங்களை ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் படித்து முடித்தால் பி.ஏ (ஆங்கிலம்) பட்டப்படிப்பு ஆங்கில பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர். பி.எஸ்.சி (கணிதம்) பி.எட் பட்ட படிப்பை முடித்த இடைநிலை ஆசிரியர் ஒரே பல்கலைக்கழகத்தில் பி.ஏ (ஆங்கிலம்) மற்றும் எம்.ஏ (ஆங்கிலம்) பட்டங்களை ஒரே கல்வி ஆண்டில் வெவ்வேறு தேர்வு கால அட்டவணையில் படித்து முடித்தால், ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற பின் எம்.ஏ (ஆங்கிலம்) பட்டப்படிப்பு ஆங்கில முதுகலை பட்டதாரி ஆசிரியர் (பி.ஜி டீச்சர்) பதவி உயர்வுக்கு தகுதியானவர்.
இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



thanks to. 

Saturday, June 25, 2011

ஆசிரியர் கவுன்சிலிங் முன்னுரிமை: "ஸ்பவுஸ்' கட்டுப்படுத்த திட்டம்

ஆசிரியர் கவுன்சிலிங் நடைமுறைகளில், "ஸ்பவுஸ்' சான்றிதழ் முன்னுரிமைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளது.
 
ஆசிரியர் கவுன்சிலிங், பலருக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.
  •  ராணுவத்தில் பணிபுரிவோரின் கணவன், மனைவி, 
  • கண்பார்வை இல்லாதவர், 
  • விதவை,
  • 40 வயதுவரை மணமாகாத முதிர்கன்னி,  
  • மூன்று சக்கர வாகனம், ஊன்றுகோல் துணையுடன் நடக்கக் கூடிய மாற்றுத்திறனாளி, 
  • இதய, சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்தவர், 
  • மனவளர்ச்சி, உடல்நலம் குன்றிய குழந்தையின் பெற்றோர் 
போன்றவற்றின் அடிப்படையில் முன்னுரிமை வழங்கப்படுகிறது. 

மேலும் 30 கிலோமீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் கணவர், மனைவி, தொடக்கக் கல்வி அதிகாரிகளிடம் (ஸ்பவுஸ்) சான்றிதழ் பெற்று சமர்ப்பிப்பதன் மூலம் சலுகை பெற முடியும். பலர் செல்வாக்கை பயன்படுத்தி, ஆண்டுதோறும் விரும்பிய பள்ளிகளுக்கு இச்சான்றிதழ் மூலம் இடமாறுதல் பெற்று வருகின்றனர். 


கடந்தாண்டு, பொதுமாறுதல் வழிகாட்டி விதிமுறைகள் 2009(எண் 148) அரசாணையின்படி, மாறுதலுக்கான கட்டுப்பாடுகள் கையாளப்பட்டது. தற்போது இதில் சில திருத்தங்களை, தொடக்கக் கல்வித்துறை இயக்குனரகம் மேற்கொள்ள உள்ளது. "ஸ்பவுஸ்' முன்னுரிமையை, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பயன்படுத்த முடியும் என்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் இடம்பெற உள்ளன. 


நன்றி



Wednesday, June 22, 2011

our panamarathupatty union BRC & AEEO OFFICE (Child Centered Intensive Bridge course)

குழந்தை மைய்ய இணைப்பு பயிற்சி புதிய பாட திட்டம் &TIME TABLE

Tips for Cellphone Users: Reduce the Radiations from Mobiles

  • முடிந்த அளவு செல்போன்கள் உபயோகிப்பதை தவிருங்கள். லேண்ட்லைன் உபயோகிக்கும் வசதி இருந்தால் அந்த இடங்களில் செல் போன்கள் உபயோகிப்பதை தவிர்த்து விடவும்.
  • ஏனென்றால் லேண்ட்லைன் போன்களை விட செல்போன்கள் பாதிப்பு அதிகம்.
  • ஏதாவது சுருக்கமான செய்தியை மற்றவர்க்கு தெரிவிக்க வேண்டுமென்றால் போன் பண்ணுவதை தவிர்த்து SMS வசதியை உபயோகிக்கவும்.
  • குழந்தைகளிடம் செல்போனில் பேசுவதோ,கொடுப்பதோ வேண்டாம். குழந்தைகளுக்கு எதிர்ப்புசக்தி குறைவாக இருப்பதால் குழந்தைகளை சுலபமாக கதீர்வீச்சு தாக்கும் அபாயம் உள்ளது.

  • உங்கள் மொபைலில் சிக்னல் மிகவும் குறைவாக உள்ள இடங்களில்(Rural area) பேச வேண்டாம். கதிர் வீச்சு பாதிப்பு அதிகம்.
  • காதில் வைத்து பேசுவது, ஹெட் போனில் பேசுவது போன்றவைகளை விட செல்போன்களின் ஸ்பீக்கர் வசதியை பயன்படுத்தி பேசுவது சிறந்தது. ஆனால் பொது இடங்களில் இது போன்று பேசும் பொது மற்றவர்களுக்கு தொந்தரவாக இல்லாமல் பார்த்து கொள்ளவும்.
  • தூங்கும் பொழுது போனை அருகிலேயே வைத்து கொண்டு தூங்கும் பழக்கமிருந்தால் அதை உடனே கைவிடவும்.
  • நீங்கள் மற்றவர்களை தொடர்பு கொள்ளும் பொழுது அவர் உங்கள் தொடர்பை ஆன் செய்தவுடன் போனை காதில் அருகே கொண்டுவந்து பேசவும். ரிங் போகும் பொழுது காதில் வைத்திருக்க வேண்டாம். ஏனென்றால் பேசும் பொழுது ஏற்ப்படும்
  • கதீர்வீச்சு அளவைவிட ரிங் போகும் பொழுது 14 மடங்கு அதிகமான கதிர்வீச்சை வெளிப்படுத்துகிறது.
  • செல்போன்களில் பேசும் பொழுது வலது பக்க காதில் வைத்து பேசாமல் இடது பக்க காதில் வைத்து பேசவும். வலது பக்கத்தில் தான் மூளை பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாம்.
  • செல்போன்களில் விளையாடுவதை முடிந்த அளவு தவிற்க்கவும் முக்கியமாக பயணம் செய்யும் பொழுது விளையாடுவதை முற்றிலுமாக தவிருங்கள். ஏனென்றால் கண்களை சிரமம் எடுத்து பார்ப்பதால் நம்முடைய கண்களில் உள்ள லென்ஸ் பகுதி பாதிக்கப்படும் வாய்ப்புள்ளது.
  • செல்போன்களை Vibrate Mode-ல் வைப்பதை தவிர்க்கவும்.
  • செல்போன்களை சட்டையின் இடது பக்க பாக்கட்டில் வைக்க வேண்டாம். இதயத்தை கதிர்வீச்சு பாதிக்கும் வாய்ப்பை குறைக்கலாம்.
  • போனில் பேசும் பொழுது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்து பேசவும்.
  • கைகளால் முழுவதுமாக பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். உங்களுடைய போனின் Internal Antena பெரும்பாலும் போனின் பின்பக்க மத்தியில் வைத்து இருப்பார்கள். இதற்கான வழிமுறையை உங்கள் Manual புத்தகத்தில் பார்த்து கொள்ளவும்.

மேற்கூறிய முறைகளை கடைபிடித்தால் கண்டிப்பாக செல்போன்களின் கதிவீச்சில் இருந்து நம்மை பாதுகாத்து கொள்ள முடியும்.


THANKS TO :
http://puducherrygovtstaff.blogspot.com/

Sunday, June 19, 2011

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தேர்தல் நாள் : 19.06.2011

தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலத் தேர்தல்

புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலப் பொறுப்பாளர்கள்

1.மாநிலத்தலைவர் : திரு.கோ.முருகேசன் .  (சேலம் மாவட்டம்)
2.பொதுச்செயலாளர் : திரு. அ.வின்செண்ட் பால்ராஜ் (திண்டுக்கல் மாவட்டம்)
3.மாநிலப் பொருளாளர் : மா.நம்பிராஜ்  (அரியலூர் மாவாட்டம்)
4.மாநிலத் துணைப்பொதுச்செயலாளர் : சி.ஜெரோம்  (ஈரோடுமாவாட்டம்)
5.மாநிலத் துணைச்செயலாளர் : திரு.அ.முனியாண்டி (விருதுநகர் மாவாட்டம்)
6.மாநில அமைப்புச்செயலாளர் : திரு.தம்பு.இராமதாஸ். (விழுப்புரம் மாவாட்டம்)
7.மாநிலத் தலைமைநிலையச் செயலாளர் : திரு.ந.கண்ணப்பன் (திருவள்ளூர் மாவாட்டம்)
8.மாநில மகளிரணிச் செயலாளர் : திருமதி.எஸ்.தேன்மொழி. (கிருஷ்ணகிரி  மாவாட்டம்)
9.மாநில துணைத் தலைவர் : 1. திரு.சி.வேலு (புதுக்கோட்டை  மாவாட்டம்)
10.மாநில துணைத் தலைவர் : 2.திரு.ஓ.கோ.செந்தில்குமார். (கோவை   மாவாட்டம்)
11.மாநில ஆய்வுக்குழு உறுப்பினர் : திரு.ம.பூபதி. (நாமக்கல்  மாவாட்டம்)



344 அரசு நடுநிலைப் பள்ளிகளை தரம் உயர்த்தும் திட்டம் நிறுத்தம்

முந்தைய தி.மு.க., அரசு, கடைசி நேரத்தில் 344 நடுநிலைப்பள்ளிகளை, உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தி அறிவித்ததை, செயல்பாட்டுக்கு கொண்டு வராமல் நிறுத்தி வைக்குமாறு, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பட்டியலை ஆய்வு செய்து, தகுதி வாய்ந்த பள்ளிகளை மட்டும் தரம் உயர்த்தும் வகையில், புதிய பட்டியலை பரிந்துரைக்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

முந்தைய தி.மு.க., அரசு, கடந்த மார்ச் மாதம் 1ம் தேதியிட்ட அரசாணையில், "ஊராட்சி ஒன்றியம், மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த 344 நடுநிலைப்பள்ளிகள், பத்தாம் வகுப்பு வரை கொண்ட உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்' என, அறிவிக்கப்பட்டது. இந்த 344 பள்ளிகள் பட்டியலில், முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசின் விருதுநகர் மாவட்டத்தில் மட்டும், 35க்கும் மேற்பட்ட பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டன. இதற்கு அடுத்ததாக, முன்னாள் உணவுத் துறை அமைச்சர் வேலுவின் திருவண்ணாமலை மாவட்டத்திற்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. தரம் உயர்த்தப்படும் பள்ளிகளில், 2,408 ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவிக்கவும் முந்தைய அரசு உத்தரவிட்டிருந்தது. இவை அனைத்தும் செயல்பாட்டுக்கு வருவதற்குள், சட்டசபை தேர்தல் வந்துவிட்டது. அதனால், அனைத்துப் பணிகளும் அப்படியே நிறுத்தப்பட்டன. இந்நிலையில், தி.மு.க., அரசு எடுத்த நடவடிக்கை குறித்து, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் சண்முகம் ஆய்வு நடத்தினார். தகுதியில்லாத பல நடுநிலைப்பள்ளிகள், தரம் உயர்த்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்றிருப்பதை அமைச்சர் கண்டுபிடித்தார். இதையடுத்து, 344 நடுநிலைப் பள்ளிகளையும், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்த வேண்டாம் என்றும், இது தொடர்பாக ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த அரசு உத்தரவை, நடுநிலைப்பள்ளிகளில் இருந்து திரும்பப் பெறுமாறும், அதிகாரிகளுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், 344 பள்ளிகளையும் ஆய்வு செய்து, அதில் தகுதி வாய்ந்த பள்ளிகளை மட்டும் தனியாக தேர்வு செய்து, புதிய பட்டியல் அளிக்குமாறும், தகுதியில்லாத பள்ளிகளை பட்டியலில் இருந்து நீக்குமாறும் அரசு கூறியுள்ளதாக, ஆசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பான பணிகள் தற்போது வேகமாக நடந்து வருகின்றன.

இதற்கிடையே, நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என்பதால் மாணவர்கள், வேறு பள்ளிகளில் சேரும் திட்டத்தைக் கைவிட்டிருந்தனர். ஆனால், அத்திட்டம் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதால், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, "டிசி' வழங்கிக் கொண்டிருப்பதாக, அரசு நடுநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் தெரிவித்தனர். தரம் உயர்த்தப்படும் நடுநிலைப்பள்ளிகள் குறித்து புதிய பட்டியல் தயாரானதும், அவை வரும் கல்வியாண்டில் தரம் உயர்த்தப்படும் எனக் கூறப்படுகிறது.

http://www.dinamalar.com/News_Detail.asp?Id=260059

thanks to:

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனர

தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்குனராக தண்.வசுந்தராதேவி நியமிக்கப்பட்டார். இதுவரை அரசு தேர்வுகள் இயக்குனராக பணியாற்றி வந்த இவர் பள்ளிக்கல்வி இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்து வந்தார். தற்போது பள்ளிக்கல்வி இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள இவர் இனி அரசு தேர்வுகள் இயக்குனர் பொறுப்பை கூடுதலாக கவனித்துக்கொள்வார். 

MATERNITY LEAVE NEW GO (on or before 16.05.2011)

Saturday, June 18, 2011

10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் பள்ளியிலேயே பதிவு செய்யலாம்

உதகை, ஜூன் 15:   நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் 10ம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் வேலைவாய்ப்புப் பதிவினை தங்களது பள்ளிகளிலேயே செய்து கொள்ளலாம் என மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் பழ.தனபாலன் தெரிவித்துள்ளார்.÷இது தொடர்பாக மாவட்ட அவர் கூறியது: நீலகிரி மாவட்டத்தில் மேனிலைப் பள்ளியில் தேர்ச்சி பெற்றவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவினை மேற்கொண்டதைப்போல,  நடப்பாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களும் அவரவர் படித்த பள்ளியிலேயே வேலைவாய்ப்பு பதிவினை இணையதளம் மூலம் மேற்கொள்ள தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்தப் பதிவுகள் இம்மாதம் 20ம் தேதி முதல் மேற்கொள்ளப்படவுள்ளன. எனவே நீலகிரி மாவட்டத்தில் எஸ்எஸ்எல்சி தேர்ச்சி பெற்றவர்கள் தங்களது வேலைவாய்ப்பு பதிவினை அந்தந்த பள்ளி வளாகங்களிலேயே செய்து கொள்ளலாம். இதற்காக அவர்களது பள்ளியில் மாணவரின் தந்தையின் பெயர், தாயின் பெயர், முகவரி, இனம் மற்றும் சாதி சான்றிதழ், குடும்ப அட்டையின் எண் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய கைபேசி எண் ஆகியவற்றை எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும். இம்மாதம் 20ம் தேதி பள்ளிகளில் சான்றிதழ் வழங்கப்பட்ட உடனே வேலைவாய்ப்பு பதிவு அட்டையும் தாமதமின்றி உடனுக்குடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எனவே, தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உடனடியாக வேலைவாய்ப்பு அடையாள அட்டையை பெற தேவையான விவரங்களை முன்கூட்டியே தாங்கள் படித்த பள்ளியில் அளிக்க வேண்டும். நடப்பாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு இம்மாதம் 20ம் தேதியிலிருந்து ஜூலை மாதம் 5ம் தேதி வரை பதிவு செய்யப்பட்டாலும் அனைவருக்கும் ஜூன் மாதம் 20ம் தேதி என்றே பதிவு மூப்பு வழங்கப்படும். எனவே, வேலைவாய்ப்பு அலுவலக பதிவிற்காக நடப்பாண்டில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை அணுக வேண்டாமெனவும் மாவட்ட வேலைவாய்ப்புó அலுவலர் பழ.தனபாலன் தெரிவித்துள்ளார்.
                                          THANKS TO :



Thursday, June 16, 2011

TN Collector : The Role model

இரண்டாம் வகுப்பு படிக்கும் தன் மகளை அரசு ஊராட்சி பள்ளியில் சேர்த்தார். மேலும் மதிய உணவும், சீருடையும் வழங்கவேண்டும் என பள்ளி தலைமை ஆசிரியரிடம் வேண்டுகோள் வைத்தார்.

அரசு பள்ளியில் தங்கள் குழந்தைகள் படிப்பது தனக்கு கௌரவம் இல்லை. தனியார் பள்ளியில் படித்தால் மட்டுமே தனக்கும் தன் குழந்தைக்கும் கௌரவம் என்று மக்கள் எண்ணிக்கொண்டுள்ள நிலை அதிகரித்து வருகிறது. அதன் எதிரொலியாகத்தான் தமிழ்நாட்டில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை வருடம், வருடம் அதிகரித்து வருகிறது.

தனியார் பள்ளியில் பல லட்சம் கொடுத்து சேர்க்க வேண்டிய நிலையும் தொடர்கிறது. அதே சமயம் அரசு பள்ளியில் படிக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது என்றால் இதை யாரும் மறுக்க முடியாது.

இந்த நிலையில் ஈரோடு ஆ‌ட்‌‌சிய‌ர் அனந்தகுமார் தன் மகளை அரசு யூனியன் பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்து அரசு வழங்கும் மதிய உணவு, சீருடைகள் தன் மகளுக்கு வழங்குமாறு பள்ளி தலைமை ஆசிரியரிடம் கேட்டுள்ளது அதிசயமாக உள்ளது.

ஈரோடு ஆ‌ட்‌சியராக இருப்பவர் அனந்தகுமார். இவடைய மனைவி ஸ்ரீவித்யா இந்த தம்பதிகளுக்கு கோபிகா (7), தீபிகா (2)ஆகிய இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் இதற்கு முன் தர்மபுரி மாவட்டத்தில் ஆ‌ட்‌சியராக பணியாற்றி வந்தார். அங்கு தன் மகள் கோபிகா முதல் வகுப்பு தனியார் பள்ளியில் படித்து வந்தார். தற்போது ஈரோடு மாறுதல் ஆகிவிட்டதால் தன் குடும்பத்துடன் ஈரோட்டிற்கு குடியேறி விட்டார். இவர் வந்தவுடன் சத்தியமங்கலத்தில் நடந்த ஜமாபந்தியில் பொதுமக்களுக்கு இடையில் சென்று நின்றுகொண்டு மக்களிடம் இவரே நேரடியாக மனு பெற்று மக்களிடம் நற்பெயர் ஈட்டினார்.


webdunia photo
WD
இதையடுத்து நேற்று தன் மகள் கோபிகாவை ஈரோடு ஆ‌ட்‌‌சிய‌ர் அலுவலகம் அருகே உள்ள குமலன்குட்டை யூனியன் தொடக்கப்பள்ளியில் இரண்டாம் வகுப்பில் சேர்த்த சென்றார். இவரை பார்த்த பள்ளி தலைமை ஆசிரியை ராணி ஆ‌ட்‌‌சிய‌ர் ஆய்வு செய்யத்தான் வந்துள்ளார் என்று எண்ணி அவர் அறைக்கு அழைத்து அவர் இருக்கையில் அமர சொன்னார். அதற்கு ஆ‌ட்‌‌சிய‌ர் அனந்தகுமார் தன் மகளை இரண்டாம் வகுப்பில் சேர்‌க்க வேண்டும் என்றார்.

அதிர்சியிலும், ஆச்சரியத்திலும் மூழ்கிய தலைமை ஆசிரியை உடனே சேர்க்கைக்கான விண்ணப்பத்தை கொடுத்தார். அந்த விண்ணப்பத்தை ஆ‌ட்‌சிய‌ர் அனந்தகுமார் எவ்வித பரபரப்புமின்றி பூர்த்தி செய்தார். பின் தன் குழந்தைக்கு அரசு வழங்கும் சீருடை வழங்குமாறு கேட்டார்.
webdunia photo
WD
அதற்கு தலைமை ஆசிரியை ராணி மதிய உணவு சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே இலவச சீருடை என்றார். உடனே என் மகளுக்கும் மதிய உணவு கொடுங்கள் என்று ஆ‌ட்‌‌சிய‌ர் அனந்தகுமார் கூறியது அங்கிருந்த அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

ஒரு அரசு அலுவலகத்தில் பணியாற்றும் கடைநிலை ஊழியரே தன் குழந்தையை கான்வென்டில் படிக்க வைக்கும் நிலையில் ஒரு ஆ‌ட்‌‌சிய‌ர் தன் குழந்தையை அரசு பள்ளியில் சேர்த்துள்ளது இப்பகுதி மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இது குறித்து ஆ‌ட்‌‌‌சிய‌ர் அனந்தகுமாரிடம் கேட்டபோது, இது என் சொந்த விருப்பம் என்றார்.

Pro.of Ely.Dir Bridge course jun 15 to july 15

(Child Centered Intensive Bridge course)1

Wednesday, June 15, 2011

Promotion pro.of Ely.Dir




(Child Centered Intensive Bridge course)


http://www.4shared.com/folder/XNr5SxY5/child_centered_intensive_bridg.html

thanks to koottani.blogspot.com

Latest News ஒன்று, ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு

புதுடில்லி: சமச்சீர் கல்வி வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவால், அதில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். இதர வகுப்புகளுக்கான பாடத்திட்டங்களை பரிசீலிக்க நிபுணர் குழு அமைக்க வேண்டும். இதன் அறிக்கையை, சென்னை ஐகோர்ட்டில் இரண்டு வாரத்திற்குள் தாக்கல் செய்ய வேண்டும் என, உத்தரவிட்டுள்ளது.

கடந்த தி.மு.க., அரசு கொண்டு வந்த சமச்சீர் கல்வித் திட்டத்தின் கீழ், கடந்த கல்வியாண்டில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு பாடத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. இந்த கல்வியாண்டில், இதர எட்டு வகுப்புகளுக்கு அமல்படுத்த, பாடப் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழகத்தில் புதிதாக பதவியேற்ற அ.தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வித் திட்டம் தரமானதாக இல்லை எனக் கூறி, அத்திட்டத்தை நிறுத்தி வைத்து அறிவித்தது. சட்டசபையில், சமச்சீர் கல்வித் திட்டத்தை நிறுத்தும் வகையில், சட்டத் திருத்த மசோதா கொண்டு வந்து, விவாதத்திற்கு பின், அன்றே நிறைவேற்றியது. அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அமைப்புகள், சென்னை ஐகோர்ட்டில் தொடர்ந்த வழக்கில், தீர்ப்பு கூறிய சென்னை ஐகோர்ட், "நடப்பு கல்வியாண்டில், முதல் மற்றும் ஆறாம் வகுப்புகளுடன், இதர வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வித் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்' என, உத்தரவிட்டது. சென்னை ஐகோர்ட் விதித்தஇடைக்கால தடையை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்தது. சுப்ரீம் கோர்ட்டுக்கு, தற்போது கோடை விடுமுறை என்பதாலும், தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறக்கவுள்ளதாலும், இந்த மனுவை அவசர மனுவாக ஏற்று விசாரிக்க, தமிழக அரசு தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இம்மனு மீதான விசாரணை, விடுமுறை பெஞ்ச் நீதிபதி சவுகான் மற்றும் நீதிபதி சுதந்திர குமார் ஆகியோர் முன்னிலையில் நேற்று நடந்தது. தமிழக அரசு சார்பில் சீனியர் வக்கீல் பி.ஆர்.ராவ், ராஜீவ் தத்தா, குரு கிருஷ்ணகுமார் ஆகியோர் ஆஜராகினர். தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் கூறியிருந்ததாவது: கடந்த தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வி திட்டம் என்ற பெயரில், அதிகாரத்தை வரம்பு மீறி பயன்படுத்தி உள்ளது. முதல்வராக இருந்த கருணாநிதி எழுதிய பாட்டு, அவரது மகள் கனிமொழி நடத்திய சங்கமம் குறித்த பாடல்கள், எல்லா வகுப்பு பாடத்திட்டங்களிலும் சேர்த்துள்ளனர். கருணாநிதியின் புகழ்பாடும் பாடல்களை, ஒன்று முதல் ஆறாம் வகுப்பு வரை குழந்தைகள் கட்டாயம் படிக்கும்படி செய்துள்ளனர். இவற்றை நீக்கி, தரமான பாடல்களை பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக பாடத்திட்டங்களை ஆராய நிபுணர் குழு அமைக்கப்பட உள்ளது. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

அரசின் நடவடிக்கையை எதிர்த்து பல அமைப்புகளும், சமச்சீர் கல்வி திட்டத்தை எதிர்த்து பல்வேறு கல்வி நிறுவனங்கள் சார்பில் மூத்த வக்கீல் ஏ.கே.கங்குலி, எம்.என். கிருஷ்ண மணி, ஹரிஷ் குமார் ஆகியோர் வாதிட்டனர். கடந்த தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் நோக்கில், ஒரே நாளில் திருத்த மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்த அன்றே கவர்னரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது' என்று, வக்கீல் கங்குலி வாதாடினார். அதற்கு நீதிபதிகள், "இதை நீங்கள் எதிர்க்க முடியாது. பார்லிமென்டிற்கு உள்ள அதிகாரம் சட்டசபைக்கு உள்ளது. சட்டசபை நடவடிக்கைகளில் நாங்கள் தலையிட முடியாது' என்றனர். இந்த வழக்கு விசாரணை வாதங்கள் ஒன்றரை மணி நேரம் நடந்தது.

பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

* தமிழகத்தில் சமச்சீர் கல்வியை ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு தொடர வேண்டும்.
* மற்ற வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வியை அமல்படுத்துவது குறித்து நிபுணர் குழு அமைக்க வேண்டும்.
* இந்த குழுவிற்கு தலைமைச் செயலர் தலைமை ஏற்க வேண்டும். எட்டு பேர் கொண்ட குழுவில் உறுப்பினர்களாக கல்வித்துறை செயலர், பள்ளிக்கல்வி இயக்குனர், கல்வித்துறையில் சிறந்த இருவர் மற்றும் தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இருவர், கல்வித்துறையில் நிபுணத்துவம் பெற்ற இருவர் இடம் பெற வேண்டும்.
* நிபுணர் குழு தனது அறிக்கையை இரண்டு வாரத்திற்குள், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும்.
* இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட ஒரு வாரத்திற்குள், தனது தீர்ப்பை ஐகோர்ட் வழங்க வேண்டும். அதுவரையில் இதர வகுப்புகளுக்கு பாடங்கள் நடத்துவதை நிறுத்திவைக்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறினர்.

Tuesday, June 14, 2011

சமச்சீர் கல்வி வழக்கு: சுப்ரீம் கோர்ட் முக்கிய தீர்ப்பு

ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஆட்சி காலத்தில் கொண்டு வந்த சமச்சீர்கல்வி திட்டத்தை ரத்து செய்து மேலும் மாற்றங்கள் கொண்டு வந்து மேம்படுத்த வேண்டியிருக்கின்ற காரணத்தினால் இந்த ஆண்டு சமச்சீர் கல்வி தொடர முடியாது என தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசின் உத்தரவை இந்த எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் பொது நல வழக்கு தொடரப்பட்டது. இதில் சென்னை ஐகோர்ட் தமிழக அரசின் முடிவுக்கு தடை விதித்தது. இதனை எதிர்த்து ‌சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு அப்பீல் செய்‌தது.

இந்த மனுவை விசாரித்த கோர்ட் இன்று உத்தரவு பிறப்பித்தது. இதன்படி, ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு இந்தாண்டு சமச்சீர் கல்வி தொடர வேண்டும். இதர வகுப்புகளில் சமச்சீர் கல்வி அமல்படுத்துவது குறித்து நிபுணர்குழு ஆராயந்து முடிவு எடுக்கலாம். நிபுணர்குழு 2 வாரத்திற்குள் அறிக்கையை சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்ய வேண்டும். நிபுணர் குழு அறிக்கை மீது சென்னை ஐகோர்ட் தினமும் விசாரணை நடத்தி ஒரு வார காலத்திற்குள் தீர்ப்பு வழங்க வேண்டும்.

மேலும் தமிழக தலைமை செயலாளர் தலைமையில் 9 பேர் கொண்ட நிபுணர்குழு அமைக்கப்பட வேண்டும். குழுவில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இரண்டு அதிகாரிகளும், தேசிய கல்வி ஆராய்ச்சி கவுன்சில் சார்பில் இரண்டு அதிகாரிகளும், கல்வித்துறை செயலாளர் மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குனரும் இடம் பெற வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் வகுப்புகளில் பாடம் நடத்த வேண்டாம். சென்னை ஐகோர்ட் தீர்ப்புக்கு பின்னர் பாடம் நடத்தலாம் இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Saturday, June 11, 2011

சமச்சீர் கல்வி திட்ட விவகாரம்: பள்ளி திறப்பு தேதி தள்ளிப்போக வாய்ப்பு

சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதாவுக்கு, சென்னை ஐகோர்ட் நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ள நிலையில், இடைக்கால தடையை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா அல்லது, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துமா என தெரியவில்லை. இந்த பிரச்னைகள் காரணமாக, பள்ளி திறப்பு தேதி, மேலும் 10 நாட்கள் வரை தள்ளி வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


முந்தைய தி.மு.க., அரசு, சமச்சீர் கல்வி திட்டத்தை கொண்டு வந்தது. மாநில பாடத்திட்டம் (ஸ்டேட் போர்டு), மெட்ரிகுலேஷன், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் என, ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை, நான்கு வகையாக உள்ள கல்வி முறைகளை ஒருங்கிணைத்து, அனைத்து மாணவர்களுக்கும் ஒரே வகையான, ஒரே தரத்திலான கல்வி திட்டத்தை வழங்கும் வகையில், சமச்சீர் கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. "சமச்சீர் கல்வி திட்டம் தரமானதாக இல்லை; மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில் இல்லை. சமச்சீர் கல்வி திட்டத்தை வலுப்படுத்தி, தரத்தை உயர்த்தி அமல்படுத்தப்படும். அதுவரை, இந்த ஆண்டு, பழைய கல்வி திட்டம் அமலில் இருக்கும். பழைய பாடப் புத்தகங்களை அச்சடிப்பதற்கு வசதியாக, பள்ளிகள் திறக்கும் தேதி, ஜூன் 15க்கு தள்ளி வைக்கப்படுகிறது' என, புதிய அமைச்சரவை கூட்டத்திற்குப்பின், தமிழக அரசு அறிவித்தது.


கடந்த 7ம் தேதி, சட்டசபையில் சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் தமிழக அரசின் சட்டத் திருத்த மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு, அன்றே விவாதம் நடத்தி, நிறைவேற்றப்பட்டது. அதே நாளில், சட்டத் திருத்த மசோதா, கவர்னருக்கு அனுப்பி ஒப்புதல் பெறப்பட்டு, அரசு கெஜட்டிலும் வெளியிடப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும் முடிவை எதிர்த்து, சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. சமச்சீர் கல்வி திட்டத்தை நிறுத்தும், தமிழக அரசின் சட்டத் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதித்து, சென்னை ஐகோர்ட் நேற்று தீர்ப்பு கூறியது. "சமச்சீர் கல்வி திட்டத்தை, நடப்பு கல்வியாண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை அமல்படுத்த வேண்டும்' என்று, நீதிபதிகள் தீர்ப்பு கூறியுள்ளனர். இன்னும் நான்கு நாட்களில், பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், இந்த தீர்ப்பு வெளியாகி உள்ளது.


ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல் முறையீடு செய்யுமா அல்லது, சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேல் முறையீடு செய்தால், அதன் மீது தீர்ப்பு பெற, கால அவகாசம் தேவைப்படும். சுப்ரீம் கோர்ட்டுக்கு தற்போது கோடை விடுமுறை அமலில் உள்ள நிலையில், நான்கு நாட்களுக்குள் மேல் முறையீடு செய்து, தீர்ப்பு பெறுவது என்பது சாத்தியமில்லை. அதே நேரத்தில், சமச்சீர் கல்வி திட்டத்தை அமல்படுத்தவும், தமிழக அரசு தயாரில்லை என, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சுப்ரீம் கோர்ட்டில், தமிழக அரசு உடனடியாக மேல் முறையீடு செய்யும் என, துறை வட்டாரங்கள் தெரிவித்தன. இதன் காரணமாக, பள்ளிகள் திறப்பு தேதி, மேலும் 10 நாட்கள் வரை தள்ளி வைக்கப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

நன்றி: