Monday, October 31, 2011

எங்கள் நண்பனின் திருமண‌ விழா


 
 மனமக்கள்
M.மகாலிங்கம் M.A.,B.Ed.,M.Phil
S.பூங்குழலி BA.,B.Ed.,
 DATE ; 31.10.2011
இறைவன் கொடுத்த வரம் - இரு 
 இனிய உள்ளங்கள்
  ஒன்றாகிய திருமணம்  
திருமண வாழ்த்து  - வாழ்க்கை கவிதை

திருமண வாழ்த்து  

வாழ்த்திடுமே.. நீ வாழ்ந்திடவே.!

மேகமென்னும் கூந்தலினை
மின்னல் கீற்றால் தலை சீவி.
பனித்துளிகள் சிந்தும் பூக்களினால்
மிதமாக அலங்கரித்து.
முகமென்னும் பால் நிலவாம்
வானவில்லின் சாயம் பூசி,
வானம் கொண்ட நிறமதிலே..
அழகான சேலை நெய்து..
கட்டிய பெண் வந்தாள்.
கெட்டி மேளம் கொட்டிட தான்.

விண்மீன்கள் புன்னகையால்
புது கவிதைகள் பாடிடுமே.
பூங்காற்றும் தென்றலும் சேர
இசை சாரல் தூவிடுமே.
மஞ்சள் வேர் தனிலே
பொன் தாலியும் ஊஞ்சலாடிடுமே.
குங்குமமும் கன்னங்களில்
அழகாஇ சிவந்திடுமே.
சூரியனும்,சந்திரனும்
தன் ஒளிகளால் வாழ்த்திடுமே.
கெட்டி மெளத்துடன்.. நாதமும்
சேர்ந்து வாழ்த்திடுமே வாழ்த்திடுமே.
நீ வாழ்ந்திட வாழ்ந்திடவே.! 

வந்திருந்த நண்பர்கள் வாழ்த்துவது என்றுமே
எங்கிருந்த போதிலும் உன் எண்ணத்தில் தோன்றிடும்
வண்ணத்தில் கவிதையாய் வடிப்பதுதான் சரியென
எல்லோரும் சொல்லிடப் பிறந்த திந்தக் கவிமலர்

மலர்களில் மாலை கட்டும் வித்தையை – உன்
கண்களுக்குச் சொல்லி வைத்த சிந்து – எங்கள்
ராஜகுமாரனின் எண்ணங்களை மலர்களாக்கி
மாலைசூடி அணிந்துகொண்ட தென்று
வாழையடி வாழையாய் பூமலரும் சோலையாய்
நல்லதொரு வேளையில் புதுமனங்கள் சேர்ந்திட
தேவர்களும் வாழ்த்துவர் வானவரும் வாழ்த்துவர்
மண்ணிலுலகில் வாழ்ந்திடும் மாந்தர்களும் வாழ்த்துவர்
சாத்திரங்கள் பழையன சரித்திரங்கள் பழையன
சமத்துவங்கள் என்பதே சத்தியமாய்ப் புதியன
பஞ்சாங்கம் பார்ப்பது பலபேரின் பழமொழி
நெஞ்சாங்கம் பார்ப்பதே அஞ்சாதோர் புதுவழி
குறையொன்றுமில்லை ராஜ் குமார் உன்னிடம்
வரையாத ஓவியம் இருக்குது பார் உன் இடம்
சிந்தாத முத்துக்கள் சேர்ந்திருக்கும் உன்மனம்
சிந்துஜாவின் சொத்தென சொல்வதிந்த திருமணம்
வாழ்க நிவிர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
பாரெங்கும் வாழ்ந்திடும் பலகோடி மக்களில்
என்றும் அழியாது உம் நற்புகழ்!
இங்கனம் ஜியோ எட்ஜ் நட்புகள்

 


பி.எட்., கல்லூரிகளில் தில்லுமுல்லு: பண மழையில் நனைகிறது கல்வித் துறை

"பணம் கொடுத்தால் போதும் பட்டம் பெற்று விட முடியும்' என்ற நிலை, பி.எட்., கல்லூரிகளில் நடக்கும் தில்லுமுல்லு காரணமாக உருவாகியுள்ளது. கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்கள், தனியார், பி.எட்.,

Saturday, October 29, 2011

பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு

தமிழ்நாடு அரசு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்கப்பட்டுள்ளது அதற்கான செய்தி வெளியீடு இங்கு தரப்படுகிறது


 
thanks :http://www.tamilnurse.com

ஆனந்த விகடன் 02-11-2011, தினகரன் 29-10-2011, தினமலர் 29-10-2011,ஜூனியர் விகடன் 02-11-2011 free download

30 ஆயிரம் ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை இல்லை: முதல்வர் அறிவிப்பு கேள்விக்குறி

"பள்ளிக் கல்வித் துறையில், 29,849 புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்' என்ற முதல்வர் ஜெயலலிதாவின் அறிவிப்பை அமல்படுத்த, இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆசிரியர் நியமன முறையில், அரசு எவ்வித கொள்கை முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வருவதால்,

Thursday, October 27, 2011

நக்கீரன் 25-10-2011 free download

27.10.2011 Dinamalar (pdf) download

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டு: தமிழகத்தில் விரைவில் திட்டம் துவக்கம்

சேலம்:பள்ளி மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்க தமிழக அரசு திட்டமிடப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

தமிழகத்தில், 2,234 அரசு உயர்நிலைப் பள்ளிகளும், 543 உதவிபெறும் உயர்நிலைப் பள்ளிகளும், 2,388 அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும், 1,044 உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளும் உள்ளன. இதில், 60 லட்சம் மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இவர்களின் பெயர், பெற்றோர் விபரம், குடும்ப வருமானம் உள்ளிட்ட சுய விபரங்களும், பள்ளியில் இவர்களின் மதிப்பெண்கள், ஒழுக்க நடவடிக்கை, விளையாட்டில் ஆர்வம் உள்ளிட்ட விபரங்கள் அனைத்தும் பதிவேடுகளில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தையும் கம்ப்யூட்டர் மயமாக்கி, மாணவ, மாணவியருக்கு, "ஸ்மார்ட் கார்டு' வழங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

Tuesday, October 25, 2011

உங்கள் மாவட்ட கலெக்டரிடம் நேரடியாக ஆன்லைனில் புகார் அளிக்க- Online Petition Filing

நம்மை சுற்றிலும் தினம் தினம் ஆயிரம் பிரச்சினைகள் உள்ளது. குடிநீர், சாலை வசதி,மின்சாரம் இன்னும் ஏராளமாக சொல்லி கொண்டே போகலாம். நம் ஊரில் உள்ள உள்ள கவுன்சிலர் மற்றும் அதிகாரிகளிகடம் சொல்லி சொல்லி அலுத்து போய் இருக்கும். செல்வாக்கு உள்ளவர்கள் பிரச்சினைகளை உயர் அதிகாரிகளிடம் பணம் கொடுத்து வேலையை சுலபமாக முடித்து கொள்வார்கள். ஆனால் அனைவாராலும் இதை செய்ய முடியாது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் முதன்மையானவர் மாவட்ட கலெக்டர் தான் ஆனால் நாம் அவரை நேரடியாக சந்தித்து புகார் அளிக்க வேண்டுமானால் படாத பாடு பட வேண்டும். இதனால் பெருமாலானவர்கள் பிரச்சினைகளை கண்டுகொள்வதில்லை.

வண்ணத்திரை 31-10-2011,குங்குமம் 31-10-2011,தினமலர் 25-10-2011

போட்டித் தேர்வு மூலம் 34 ஏ.இ.இ.ஓ., விரிவுரையாளர்கள் விரைவில் தேர்வு

உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மற்றும் முதுநிலை விரிவுரையாளர்களாக, தலா 34 பேரை, போட்டித் தேர்வு மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் தேர்வு செய்ய உள்ளது. இதற்கான அறிவிப்பு, இன்று அல்லது நாளை வெளியாகிறது. இதற்கான விண்ணப்பங்கள், நவ., 2 முதல் 19ம் தேதி வரை, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கிடைக்கும்.தொடக்க கல்வித் துறையில் உள்ள, உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் (ஏ.இ.இ.ஓ.,) பணியிடம், மிகவும் முக்கியமானது. ஒரு மாவட்டம் பல பகுதிகளாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பகுதியிலும் உள்ள ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வாகம் செய்யும் பொறுப்பு, இந்த அலுவலர்களிடம் உள்ளது.

அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள் !

அனைத்து நண்பர்களுக்கும் எமது தீபாவளி நல்வாழ்த்துக்கள்

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் எமது உளம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்

Monday, October 24, 2011

கல்கியின் நாவல்கள், புத்தகங்கள் அணைத்தையும் download செய்ய


  தமிழின் முக்கிய எழுத்தாளில்ஒருவரான அமரர் கல்கி அவர்களின் 4 பெரும் நாவல்களும், 6 நாவல்களும், 75 சிறுகதைகள் ஆகிய அனைத்தும் ஒரே லிங்கில் டவுன்லோட் செய்து கொள்ளவும். 18 Mb அளவு உள்ள இந்த பைலை WinRar கொண்டு Extract செய்து விரிவாக்கி கொள்ளவும்.

Sunday, October 23, 2011

தமிழக உள்ளாட்சி தேர்தல் அனைத்துவகை (மேயர்,வார்டு கவுன்சிலர்,நகராட்சி,பேரூராட்சி, சிற்றூராட்சி) வேட்பாளர்களின் விவரம் அவர்கள் பெற்ற ஓட்டுகள் மற்றும் வென்றவர்கள் டெபாசிட் காலியானவர்கள் பற்றிய முழுமையான விவரம் அறிய‌

தமிழக உள்ளாட்சி தேர்தல் அனைத்துவகை (மேயர்,வார்டு கவுன்சிலர்,நகராட்சி,பேரூராட்சி, சிற்றூராட்சி) வேட்பாளர்களின் விவரம் அவர்கள் பெற்ற ஓட்டுகள் மற்றும் வென்றவர்கள் டெபாசிட் காலியானவர்கள் பற்றிய முழுமையான விவரம் அறிய‌

Read more click here

நிம்மதியான தூக்கம் இனி போச்சு : இரவிலும் மின்வெட்டு வந்தாச்சு

தீபாவளி பண்டிகை காரணமாக, அதிக மின்தேவை ஏற்பட்டுள்ளதால், இரவு நேரத்திலும் மின்வெட்டை அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. "தீபாவளி வரை இரவு நேர மின்வெட்டு தொடரும்' என, மின்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழகத்தில் மின் பற்றாக்குறையை சமாளிக்க, சென்னையில் ஒரு மணிநேரம், மாவட்டங்களில் இரண்டு மணி நேர மின்வெட்டு அமலாகிறது. இதில், இரவு நேரங்களில் மின்வெட்டை அமல்படுத்துவதில்லை. சில

Read more click here

சினிகூத்து 22-10-2011,பாலஜோதிடம் 22-10-2011 ,சினிமா எக்ஸ்பிரஸ் 16-10-2011 , 26-10-2011 ஜூனியர் விகடன், 22-10-2011 நக்கீரன்

Thursday, October 20, 2011

ஆனந்தவிகடன் 26-10-2011,தினமலர் 20-10-2011,சினிக்கூத்து 18-10-2011 free download

சத்துணவு திட்டம் சீரமைப்பு: விரைவில் விதவிதமான சாப்பாடு

சத்துணவுத் திட்டத்தில், மாணவர்களுக்கு தினமும் விதவிதமான உணவு வழங்கும் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து, மாநிலம் முழுவதும் அமல்படுத்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, சத்துணவு நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.

நாக்கு செத்துப் போச்சு!
தற்போது, தினமும், சாதம், சாம்பார்,

click here to more news

பகவத் கீதை தமிழில் சுகிசிவத்தின் குர‌லில் ஆடியோ தரவிறக்க‌ -Not First on Net but worth adding to this thread

 பகவத் கீதை தமிழில் சுகிசிவத்தின் குர‌லில் ஆடியோ தரவிறக்க‌
3 Hours 40 Minutes - 250MB - 13 Chapters

Chapter 1 Download Link
Chapter 2 Download Link
Chapter 3 Download Link
Chapter 4 Download Link
Chapter 5 Download Link
Chapter 6 Download Link
Chapter 7 Download Link
Chapter 8 Download Link
Chapter 9 Download Link
Chapter 10 Download Link
Chapter 11Download Link
Chapter 12 Download Link
Chapter 13 Download Link

Wednesday, October 19, 2011

அனைத்து அரசு பள்ளிகளிலும், அடுத்த மாத இறுதிக்குள், கழிப்பறை வசதி சுப்ரீம் கோர்ட்உத்தரவு.

அனைத்து அரசு பள்ளிகளிலும், அடுத்த மாத இறுதிக்குள், கழிப்பறை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும்" என, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. அரசு பள்ளிகளில், குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி ஏற்படுத்துவது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு, நீதிபதி டி.கெ.ஜெயின் தலைமையிலான பெஞ்ச் முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

பள்ளிகளில் 5 மாணவர்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் கணினிகள் வழங்கப்பட உள்ளது

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6 முதல் 12  வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் 5 மாணவர்களுக்கு ஒன்று என்ற வீதத்தில் கணினிகள் வழங்கப்பட உள்ளது .இது சம்பந்தமாக பள்ளிகளில் விவரங்களை  கோர முதன்மை கல்வியலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது .

அரசு ஊழியர், ஆசிரியர்கள் கடும் அதிருப்தி

ஒரு நாள் இடைவெளியில், இரண்டு கட்ட தேர்தல் நடத்துவது, அரசு ஊழியர், ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. "குறைந்தபட்சம் இரண்டு நாட்களாவது இடைவெளி விட்டிருக்க வேண்டும்' என்கின்றனர், தேர்தல் பணியில் ஈடுபட்ட ஆசிரியர்கள்.

நக்கீரன் 19-10-2011,ஜூனியர் விகடன் 23-10-2011,சக்தி விகடன் 01-11-2011,தினமலர் 19-10-2011 FREE DOWNLOAD

புதிய புத்தகங்கள்

தரவிறக்க அந்த பெயரின் மீது கிளிக் செய்யவும்

நக்கீரன் 19-10-2011

ஜூனியர் விகடன் 23-10-2011

தினமலர் 19-10-2011

 சக்தி விகடன் 01-11-2011

 

Tuesday, October 18, 2011

ஓட்டுப்போட முடியாத நிலையில் தனியார் ஊழியர்கள்

தேர்தல் கமிஷனின் உத்தரவை மீறி, சென்னையில் நேற்று, பல தனியார் நிறுவனங்கள் மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள பல தனியார் பொறியியல் கல்லூரிகள், வழக்கம் போல் இயங்கியதால், பணியாளர்களும், மாணவர்களும் ஓட்டுப் போட முடியாத நிலை ஏற்பட்டது.

"தேர்தல் அன்று ஊதியத்துடன் விடுமுறை அளிக்காத நிறுவனங்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, மாநில தேர்தல் கமிஷன் விடுமுறை உத்தரவை

READ MORE CLICK

2006 மற்றும் 2011 உள்ளாட்சி தேர்தல் - ஒரு ஒப்பீடு.

2006 மற்றும் 2011 உள்ளாட்சி தேர்தல் - இரண்டையும் ஒப்பிட்டு பார்த்தல் நல்லது. கட்சிகளையோ, எது ஜெயிக்கும், எது ஜெயிக்க வேண்டும், எது ஜெயிக்க கூடாது என்பது மாதிரியான கருத்துகள் இதில் இல்லை. 2006 மற்றும் 2011 உள்ளாட்சி தேர்தல் - இவை இரண்டின் வன்முறை, அன்பளிப்பு மூலம் வெற்றியை தனக்காக்குதல் மற்றும் தேர்தல் ஆணையத்தின் சீரிய பணி - இவற்றை மட்டும் பார்ப்போம்.

சென்ற சனிக்கிழமை தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முன்னாள் தமிழக துணை முதல்வர் ஸ்டாலின் இப்படி பேசினார். "இந்த தேர்தல் சுதந்திரமாக நடக்கும். உயர் நீதிமன்றம் தெளிவாக தீர்ப்பளித்துள்ளது. வாக்குபதிவை வீடியோ எடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது. வெளிமாநில காவல்துறை, சி.ஆர்.பி.எப் காவல்துறை ஆகியவை பாதுகாப்புக்கு நிறுத்த வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சுதந்திரமாக செயல்பட்டனர். அதிகாரிகள் தப்பான காரியங்களுக்கு துணை போக கூடாது. அப்படி சென்றால் நீங்கள்தான் உயர்நீதி மன்றத்துக்கு வந்து நிற்க வேண்டும். உங்களை அச்சப்படுத்த இதை சொல்லவில்லை. இந்த தேர்தலில் எந்த அராஜகமும் நடக்க வாய்ப்பு இல்லை. நீதிமன்றத்தின் நேரடி கண்காப்பில் தேர்தல் நடப்பதால், மக்கள் அச்சமின்றி, சுதந்திரமாக வாக்களிக்கலாம். திருச்சியில் நடந்துள்ள இடைத் தேர்தலில் மக்கள் நல்ல தீர்ப்பு வழங்க இருக்கிறார்கள். சென்னை நகர மக்களும் நல்ல தீர்ப்பை வழங்க வேண்டும். " இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

அவர் பேசியதில் எத்தனை சதவிதம் உண்மை உள்ளது. "காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நாங்கள் ஆட்சியில் இருந்தபோது சுதந்திரமாக செயல்பட்டனர்" என்று காமெடியாய் பேசி இருக்கிறார். அதிகாரிகள் சுதந்திரமாக செயல்படுவதை விட, "நேர்மையாக" செயல்படுவதே ஜனநாயகத்திற்கு அழகும், பெருமையும், முக்கியமும் கூட. பதிவில் இணைத்திருக்கும் படத்தை பார்த்தாலே தெரியும்.

2006ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் நடந்த வன்முறை. வாக்கு போட வந்த மக்களின் மீது எத்தனை எத்தனை வன்முறை. "மக்கள் தீர்ப்பே மகேசனின் தீர்ப்பு" என்றவர்கள் மகேசனின் தீர்ப்பை வாங்க மக்களை என்ன பாடுபடுத்துகிறார்கள். ஸ்டாலின் அவர்கள் சொன்னது போல "தேர்தல் சுதந்திரமாக நடக்கும். மக்கள் அச்சமின்றி வாக்களிக்கலாம். புகைப்படத்தில் பார்ப்பது போல - மண்டை உடைந்து போகிற சம்பவம் எல்லாம் நடக்காது"

காரணம் நீதிமன்றம், தேர்தல் ஆணையம் என்பதை தாண்டி தி.மு.க ஆளுங்கட்சியாக இல்லாமல் இருப்பது. அவர்களுக்கு தெரிந்தது இரண்டு ஃபார்முலா. ஒன்று - திருமங்கலம் ஃபார்முலா, அடுத்தது - வன்முறை ஃபார்முலா. இரண்டும் இங்கே நடக்க வாய்ப்பில்லாததால் - தேர்தல் நிச்சயம் அமைதியாக, நேர்மையாக நடக்கும். காலையில் வாக்குச்சாவடிகளை வலம் வந்தபோது - மக்கள், சென்ற சட்டமன்ற தேர்தலில் வாக்களித்தது போல பொறுமையாக, விருப்பத்துடன் வாக்களித்தனர். இடது பக்க படம் இன்றைக்கு எடுத்தது. மற்றவை 2006உள்ளாட்சி தேர்தலில் எடுத்தவை.(புகைப்படங்கள் : இட்லிவடை)அ.தி.மு.க. ஜெயித்தாலும் சரி, தி.மு.க ஜெயித்தாலும் சரி - இம்மாதிரியான நேர்மையான தேர்தல் - ஜனநாயகம் ஜெயித்ததாகவே காட்டும். சில தினங்களுக்கு முன் திராவிட கழக தலைவர் கி.வீரமணி - கலைஞர் தொலைக்காட்சியில் சொன்னார். "ஆளுங்கட்சி தங்களை தானே சோதித்து கொள்வதற்கான உரைக்கல் - இம்மாதிரியான தேர்தல்" என்றார்.

உண்மை. ஆனால், நேர்மையாக தேர்தல் நடந்தால் மட்டுமே உரைகல். காப்பி அடித்து தான் பாஸ் பண்ணினால் அது வெற்றியாகி விடுமா? அப்படி தான் முறைகேடாக வெற்றி பெற்றார்கள். "சென்ற உள்ளாட்சி தேர்தல் தொடங்கி மதுரை மத்தி, திருமங்கலம், பென்னகரம், 2009 நாடாளுமன்ற தேர்தல்" என... அம்மாதிரியான வெற்றிகள் பெறுவதால் - மக்களின் அதிருப்தி கடைசிவரை - அன்றை தி.மு.க வுக்கு தெரிய வாய்ப்பில்லாமலே போய்விட்டது. தெரிந்தாலும் தங்களின் ஃபார்முலாவை தொடர்ந்து பயன்படுத்தினால் போதும் என்று நினைத்தார்கள்.

ஆனால் நீதிமன்றம், தேர்தல் ஆணையம், நியாயமான அதிகாரிகள் - இவர்கள் முன், அந்த ஃபார்முலா தவிடுபொடியானது. அ.தி.மு.க அம்மாதிரியான தவறுகளை செய்து வெற்ற பெற நினைக்க வேண்டாம். நினைக்கவில்லை என்பது மேலதிக தகவல். "தேர்தல் பாதை திருடர் பாதை" என்று பிதற்றும் புரட்(சி)டாளர்களுக்கு, தங்களின் நேர்மை மூலம் பதில் சொல்ல வேண்டிய கடமை கட்சிகளுக்கு, தலைமைகளுக்கு உள்ளது என்பதை மறந்துவிடாது.
thanks :
http://oosssai.blogspot.com

Monday, October 17, 2011

குங்குமம் 24-10-2011 free download $ 23-10-2011 நாணய விகடன்

வண்ணத்திரை 24-10-2011 FREE DOWNLOAD

மழை பெய்யும்போது செல்போனில் பேசியவர் மின்னல் தாக்கி பலி

ராமநாதபுரம், அக்.14 (டிஎன்எஸ்)  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே தத்தாங்குடியில் மழை பெய்துகொண்டிருந்தபோது செல்போனில் பேசிக்கொண்டே சென்ற விவசாயி மீது மின்னல் தாக்கியதில் சம்பவ இடத்திலேயே அவர் கருகி உயிரிழந்தார்.

அரசு பணியாளர் தேர்வில் கோடிக்கணக்கில் மோசடி; போலீஸ் சோதனையில் அம்பலம்

சென்னை, அக்.15 (டிஎன்எஸ்)  அரசுத் தேர்வுப் பணிகளில் மிகப்பெரிய அளவில் மோசடிகள் நடந்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவர் ஆர்.செல்லமுத்து மற்றும் 13 உறுப்பினர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் நேற்று (அக்.14) திடீர் சோதனை நடத்தினார்கள். உதவிப் பல் மருத்துவர் பணி, மோட்டார் வாகன ஆய்வாளர்கள், குரூப்-1 தேர்வு ஆகியவற்றில் முறைகேடுகள் நடந்ததை தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த அதிரடி சோதனையை மேற் கொண்டனர். click here to detail news

தமிழகம் முழுவதும் உயர்நிலை-மேல்நிலைப் பள்ளியில் வகுப்பு நேரம் அதிகரிப்பு (16.10.2011)

சென்னை, அக்.16 (டிஎன்எஸ்) தமிழ்நாடு முழுவதும் சமச்சீர் கல்வி வகுப்பு தொடங்க கால தாமதம் ஏற்பட்டதால் பாடங்களை கற்பிப்பதற்காக பள்ளிகளின் நேரத்தை முன்பைவிட இந்த ஆண்டு 30 நிமிடம் அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து அந்த அந்த பள்ளிகளில் ஏற்கனவே உள்ள பள்ளிக்கூட நேரத்தைவிட அரைமணிநேரம் அதிகரிக்கும் படி அனைத்து முதன்மை கல்வி அதிகாரிகளும் அனைத்து உயர்நிலை பள்ளிகளுக்கும் மேல்நிலைப்பள்ளிகளுக்கும் உத்தரவிட்டது.

அதன்படி ஒவ்வொரு அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளிகளில் 30 நிமிடம் அதிகரிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் ப.மணி கூறுகையில் இந்த நேர மாற்றம் இப்போது எடுத்த முடிவு அல்ல ஏற்கனவே 2 மாதங்களுக்கு முன்click here to detail news

thanks :


Sunday, October 16, 2011

குமுதம் சுற்றுலா சிறப்பிதழ் - படித்து பாதுகாக்க வேண்டிய புத்தகம்

இந்தியாவின் பாரம்பரியமான சுற்றுலா தளங்களை படங்களுடன், அருமையான விளகங்களுடன் இந்த மென்புத்தகத்தில் விளக்கி இருக்கிறார்கள். அனைவரும் படித்து பாதுகாக்க வேண்டிய இந்த புத்தகத்தில் 23 சுற்றுலா தளங்கள் இடம் பிடித்து இருக்கின்றன. அவை..,குமுதம் சுற்றுலா சிறப்பிதழ் டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
thanks
http://vadakaraithariq.blogspot.com19-10-2011 ஜூனியர் விகடன், 15-10-2011 நக்கீரன் டவுன்லோட் செய்ய

இந்த வார ஜூனியர் விகடன் மற்றும் நக்கீரன் தரவிறக்க கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.
19-10-2011 ஜூனியர் விகடன்

15-10-2011 நக்கீரன்


நான் அறிந்த செய்திகளை நண்பர்களும் அறிய விரும்புகிறேன்.

எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கலும் இணையத்தில் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன்vkaveananth

Saturday, October 15, 2011

19-10-2011 ஆனந்த விகடன் டவுன்லோட் செய்ய

இந்த வாரத்தின் ஆனந்த விகடன் தரவிறக்க கிழே உள்ள லிங்கில் கிளிக் செய்யவும்.


19-10-2011 ஆனந்த விகடன்


நான் அறிந்த செய்திகளை நண்பர்களும் அறிய விரும்புகிறேன்.

எனது தளத்தில் வெளியிடப்படும் இதழ்கள் அனைத்தும் என்னால் நேரடியாக பதிவேற்ற பட்டவை கிடையாது. நீங்கலும் இணையத்தில் தேடினாலும் கிடைக்கக்கூடியது தான். இதன் மூலமாக எந்தவிதமான வருவாயும் நான் பெறவில்லை. வெளிநாட்டில் வாழும் நண்பர்களுக்காக இணையத்தில் கிடைப்பவற்றை எனது தளத்தில் பதிவிடுகிறேன். சம்பந்தபட்ட இதழ்கள் எதிர்ப்பு தெரிவித்தால் எந்த நேரமும் நீக்கியும் விடுவேன். மறக்காமல் கருத்துக்களை பதிவு செய்யவும். அன்புடன்

Dinamalar (Varamalar Book 16-October-2011)

4tamilmedia